எல்லைத் திறப்பை நிறுத்திய ஆஸ்திரேலியா

சிட்னி: திறன் அடிப்­ப­டை­யில் நிய­மிக்­கப்­படும் ஊழி­யர்­க­ளுக்­கும் மாண­வர்­க­ளுக்­கும் எல்­லை­யைத் திறந்­து­விட எடுக்­கப்­பட்ட முடிவை ஆஸ்­தி­ரே­லியா நேற்று கடைசி நேரத்­தில் மீட்­டுக்­கொண்­டது.

ஓமிக்­ரான் கொவிட்-19 கிருமி வகை குறித்து அச்­சம் நில­வு­வ­தால் முன்­னெச்ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக அது இந்த நட­வ­டிக்­கையை எடுத்­துள்­ளது.

அவ­ச­ர­நிலை பாது­காப்பு கூட்­டத்­துக்­குப் பிறகு அதி­கம் எதிர்­பார்க்­கப்­பட்ட டிசம்­பர் 1ஆம் தேதி எல்­லைத் திறப்பு, குறைந்­தது இரண்டு வாரங்­க­ளுக்கு ஒத்­தி­வைக்­கப்­படும் என்று ஆஸ்­தி­ரே­லி­யப் பிர­த­மர் ஸ்காட் மோரி­சன் அறி­வித்­தார். வெளி­நாட்­டுப் பய­ணி­

க­ளுக்கு கடந்த 20 மாதங்­க­ளுக்­கும் மேலாக ஆஸ்­தி­ரே­லியா

பய­ணத் தடை விதித்­துள்­ளது.

இத­னால் ஆஸ்­தி­ரே­லி­யா­வில் ஊழி­யர் பற்­றாக்­குறை நிலவி வரு­கிறது. அது­மட்­டு­மல்­லாது, சுற்­றுப்­ப­ய­ணத் துறை­யும் வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் இது­வரை ஐந்து பேருக்கு ஓமிக்­ரான் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

மருத்­துவ நிபு­ணர்­க­ளின் ஆலோ­ச­னைப்­படி எல்­லைத் திறப்பு நிறுத்­தப்­பட்­டுள்­ள­தா­கப் பிர­த­மர் மோரி­சன் தெரி­வித்­தார்.

ஓமிக்­ரான் பற்றி கூடு­தல் தக­வல் திரட்ட இந்­தக் கால

அவ­கா­சம் அவ­சி­யம் என்­றார் அவர்.

ஓமிக்­ரா­னால் உல­க­ளா­விய

அபா­ய­நிலை

ஓமிக்­ரான் கொவிட்-19 கிருமி வகை­யால் உல­க­ளா­விய நிலை­யில் ஆபத்து ஏற்­ப­டக்­கூ­டும் என்­றும் அதை எதிர்­கொள்ள உலக நாடு­கள் தயா­ராக இருக்க வேண்­டும் என்­றும் உலக சுகா­தார நிறு­வ­னம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. சில நாடு­களில் மிக மோச­மான விளைவு­ களை அது ஏற்­ப­டுத்­தக்­கூ­டு­ம் என்று அது கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!