‘ஓமிக்ரான்’ அச்சுறுத்தல் இருந்தும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் நியூசிலாந்து

வெலிங்­டன்: புது­வகை கொவிட்-19 கிருமி வகை­யான ஓமிக்­ரான், உல­கெங்­கும் அச்சத்தை ஏற்­ப­டுத்தி வரு­கிறது.

இருப்­பி­னும், கொவிட்-19 சூழ­லு­டன் வழக்­க­மான வாழ்க்­கை­

மு­றைக்­குத் திரும்ப நியூ­சி­லாந்து முடி­வெ­டுத்­துள்­ளது.

அதற்­குத் தேவை­யான நட­வ­டிக்­கை­கள் அடுத்த வாரத்­தி­லி­ருந்து நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்று நியூ­சி­லாந்­துப் பிர­த­மர் ஜெசின்டா ஆர்­டன் நேற்று தெரி­வித்­தார்.

தற்­போ­தைய நில­வ­ரப்­படி நியூ­சி­லாந்­தில் யாரும் ஓமிக்­ரான் கிரு­மி­யால் பாதிப்­ப­டை­ய­வில்லை. இருப்­பி­னும், மற்ற நாடு­களில் ஓமிக்­ரான் மெல்ல தலை­தூக்­கு­வதை திரு­வாட்டி ஆர்­டன் சுட்­டி­னார்.

எனவே, விழிப்­பு­டன் இருப்­பது மிக­வும் அவ­சி­யம் என்று அவர் கூறி­னார்.

"எங்­கள் எல்­லை­க­ளுக்கு வெளியே ஆபத்து காத்­துக்­கொண்­டி­ருக்­கிறது என்­பதை ஓமிக்­ரான் நினை­வூட்­டு­கிறது," என்­றார் திரு­வாட்டி ஆர்­டன்.

மற்ற நாடு­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் மிகக் கடு­மை­யான எல்­லைக் கட்­டுப்­பாட்­டு­களை நியூ­சி­லாந்து கொண்­டுள்­ளது. அடுத்த ஐந்து மாதங்­க­ளுக்கு பெரும்­பா­லான அனைத்­து­ல­கப் பய­ணி­க­ளுக்கு அது தடை விதித்­துள்­ளது.

ஆப்­பி­ரிக்­கக் கண்­டத்­தின் தென் பகு­தி­யில் உள்ள ஒன்­பது நாடு­க­ளி­லி­ருந்து வரும் பய­ணி­க­ளுக்­குப் புதிய கட்­டுப்­பாட்­டு­களை நியூ­சி­லாந்து கடந்த வார­யி­று­தி­யில் நடை­மு­றைப்­ப­டுத்­தி­யது.

இந்த ஐந்து நாடுகளைச் சேர்ந்த பய­ணி­கள் மட்­டுமே நியூ­சி­லாந்­துக்­குப் பய­ணம் செய்ய முடி­யும் என்­றும் அவர்­கள் 14 நாட்­க­ளுக்­குத் தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வர் என்­றும் அறி­விக்­கப்­பட்­டது.

ஓமிக்­ரான் கிருமி வகை எந்த அள­வுக்­குப் பாதிப்பை ஏற்­படுத்­தும் என்­பது குறித்து தெரிந்­து­கொள்ள கூடு­தல் தக­வல் தேவை என்று திரு­வாட்டி ஆர்­டன் கூறி­னார்.

தடுப்­பூ­சிக்கு அது கட்­டுப்­ப­டுமா, டெல்டா கிருமி வகை­யை­விட அது ஆபத்­து­மிக்­கதா என்­பது குறித்து இன்­னும் தெரி­ய­வில்லை என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!