லிஸ்பன்: போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனைச் சேர்ந்த பெலெனென்சஸ் காற்பந்துக் குழு ஓமிக்ரான் கிருமி வகையால் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்குழுவைச் சேர்ந்த 13 ஆட்டக்காரர்களுக்கும் ஊழியர்களுக்கும் ஓமிக்ரான் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
லீக் ஆட்டம் ஒன்றில் பென்ஃபிகா குழுவுக்கு
எதிராக விளையாடிக்
கொண்டிருந்தபோது பாதிப்பு குறித்து தெரியவந்தது.
இதனால் ஆட்டம் பாதி வழியில் கைவிடப்பட்டது.

