இலங்கையில் அடித்து விரட்டப்பட்ட தமிழர்கள்

இலங்கையில் அடித்து விரட்டப்பட்ட தமிழர்கள்

1 mins read
fe28bfd6-f255-446a-91ab-056cab84cb78
-

கொழும்பு: இலங்கை உள்­நாட்­டுப் போரில் மாண்ட தமி­ழர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­தும் வகை­யில் கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று நினைவு தினம் அனு­ச­ரிக்­கப்­பட்­டது.

இந்த நினை­வஞ்­சலி 2009ஆம் ஆண்­டில் நடந்த இறு­திப் போர் நடை­பெற்ற முல்­லைத்­தீ­வில் அனு­ச­ரிக்­கப்­பட்­டது.

அஞ்­சலி செலுத்தும் இடத்­துக்கு வந்த இலங்கை ராணு­வத்­தி­னர் அங்­கி­ருந்த செய்­தி­யா­ளர்­களை அடித்­துக் காயப்­ப­டுத்­தி­ய­தாக ஊட­கங்­கள் தெரி­வித்­தன.

மாண்ட தங்­கள் அன்­புக்­

கு­ரி­ய­வர்­க­ளின் கல்­ல­றை­களில் விளக்­கேற்ற சென்­றி­ருந்த உற­வி­னர்­க­ளை­யும் ராணு­வத்­தி­னர் வலுக்­கட்­டா­ய­மாக அங்­கி­ருந்து வெளி­யேற்­றி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

தாக்­கு­தல் குறித்து செய்­தி­யா­ளர்­கள் காவல்­து­றை­யி­டம் புகார் செய்­துள்­ள­னர். இது­கு­றித்து விசா­ரணை நடத்­து­வ­தாக காவல்­துறை கூறி­யது.

தனி­நாடு கோரி போர் புரிந்த தமி­ழீழ விடு­தைப் புலி­கள் 1980களின் பிற்­ப­கு­தி­யி­லி­ருந்து கடைசி போர் வரை ஆண்­டு­தோ­றும் நவம்­பர் 27ஆம் தேதி­யன்று மாண்ட போரா­ளி­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­தும் வகை­யில் 'மாவீ­ரர் தினத்தை' அனு­ச­ரித்­தது.

ஆனால் 2019ஆம் ஆண்­டில் திரு கோத்தபாய ராஜ­பக்சே அதி­ப­ரா­ன­தும் போரில் மடிந்த தமி­ழர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­தும் நிகழ்­வு­க­ளுக்­குத் தடை விதித்­தார்.

போரின்­போது குறைந்­தது 40,000 தமி­ழர்­களை இலங்கை ராணு­வம் கொன்­ற­தாக ஐநா குற்­றம் சுமத்­தி­யது. இந்­தக் குற்­றச்­சாட்டை இலங்கை மறுத்­துள்­ளது.