ஓமிக்ரான்: இதுவரை இங்கு இல்லை, ஆனால் எப்போது வரும் என்பதே கேள்வி

ஓமிக்ரான்: இதுவரை இங்கு இல்லை, ஆனால் எப்போது வரும் என்பதே கேள்வி

1 mins read
cb258890-d602-43e0-8159-be00a3cefee2
'விடிஎல்' திட்டத்தின்கீழ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னையில் இருந்து புறப்பட்டு இன்று காலை சிங்கப்பூர் வந்திறங்கிய பயணிகள். படம்: திமத்தி டேவிட் -

சிங்கப்பூரில் இதுவரை எவரையும் ஓமிக்ரான் கிருமி தொற்றவில்லை. இருந்தாலும், இங்கு எப்போது அது தொற்றும் என்பதுதான் கேள்வி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கொவிட்-19 அன்றாட தொற்றும் வாராந்திர தொற்று விகிதமும் தொடர்ந்து நிலையாக இருந்து வருகிறது. என்றாலும், அவ்வளவாக வெளியே தெரியாத ஓமிக்ரான் தொடர்பில் சிங்கப்பூர் தொடர்ந்து விழிப்புநிலையில் இருந்துவர வேண்டும் என்று அமைச்சுகள்நிலை கொவிட்-19 பணிக்குழு இணைத் தலைவர்களில் ஒருவரான அமைச்சர் காம் கிம் யோங் தெரிவித்தார்.

அந்தக் கிருமி இதுவரை இங்கு யாருக்கும் தொற்றவில்லை என்றாலும் எப்போது அது தொற்றும் என்பதுதான் இப்போதுள்ள கேள்வி என்று அவர் கூறினார். ஆகையால் ஓமிக்ரான் பற்றி மேலும் பலவற்றைத் தெரிந்துகொண்டு வரும் அதேவேளையில், சிங்கப்பூர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றாரவர்.