ஓமிக்ரானுக்குப் புதிய தடுப்பூசி தேவை: மொடர்னா

ஓமிக்ரானுக்குப் புதிய தடுப்பூசி தேவை: மொடர்னா

1 mins read
56c621b1-b34a-4c95-b97f-aed162c9addc
-

லண்டன்: ஓமிக்ரான் உருமாறிய தொற்றுக்கு எதிராக மொடர்னா தடுப்பூசி சிறப்பாகச் செயல்படுவது சந்தேகம் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

பல பிறழ்வுகளைக் கொண்டுள்ள ஓமிக்ரானுக்கு எதிராக மற்றோர் தடுப்பூசி தேவை என்று மொடர்னா நிறுவன மூத்த நிர்வாகிகள் கூறினர். இதையடுத்து, பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்தன.

ஃபைசர், பயோயென்டெக் நிறுவனங்களும் ஓமிக்ரானுக்கு எதிராக தங்களது தடுப்பூசியும் பலனளிக்காது என்றன. ஆனால் விரைவில் அதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.