ஆப்பிரிக்காவுக்குத் தடுப்பூசி அனுப்ப இந்தியா உறுதி

ஆப்பிரிக்காவுக்குத் தடுப்பூசி அனுப்ப இந்தியா உறுதி

1 mins read
d22e1279-a8a9-4ab1-a98f-a664365c7e8f
-

நியூ­டெல்லி: சீனா­வைத் தொடர்ந்து ஆப்­பி­ரிக்க நாடு­க­ளுக்­குத் தடுப்­பூசி அனுப்­பு­வ­தாக இந்­தி­யா­வும் கூறி­யுள்­ளது.

ஆப்­பி­ரிக்க நாடு­க­ளு­டன் இந்­தி­யா­வும் சீனா­வும் நெருங்­கிய உற­வைக் கொண்­டுள்­ளன. அங்கு அதிக முத­லீடு செய்­துள்ள சீனா, மேலும் 10 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் முத­லீடு செய்­வ­தாக திங்­க­ளன்று உறுதி அளித்­தது.

ஓமிக்­ரானை எதிர்த்துப் போரா­டும் வகை­யில் ஆப்­பி­ரிக்க நாடு­ க­ளுக்கு ஒரு பில்­லி­யன் தடுப்­பூ­சி ­களை அனுப்­பு­வ­தாக சீனா நேற்று முன்­தி­னம் கூறி­யது. அத்­து­டன் 1500 மருத்­து­வர்­கள், சுகா­தா­ரப் பணி­யா­ளர்­களை அனுப்­பு­வ­தா­க­வும் அது கூறி­யது.

ஏற்­கெ­னவே 600 மில்­லி­யன் தடுப்­பூ­சி­களை ஆப்­பி­ரிக்க நாடு­க­ளுக்கு சீனா அனுப்­பி­யுள்­ளது.

இந்­நி­லை­யில், ஆப்­பி­ரிக்­கா­விற்கு விரை­வாக தடுப்­பூ­சி­களை அனுப்ப தயா­ராக உள்­ள­தாக இந்­தி­யா­வும் நேற்று சொன்­னது.

"தடுப்­பூசி வழங்­கு­வது உள்­ளிட்ட ஓமிக்­ரான் உரு­மா­றிய தொற்­றுக்கு எதி­ரான போராட்­டத்­தில் ஆப்­பி­ரிக்க நாடுகளுக்கு உதவ இந்­திய அர­சாங்­கம் தயா­ராக உள்­ளது.

"அது 'கோவேக்ஸ்' தடுப்­பூசி பகிர்வு திட்­டத்­தின் கீழோ அல்­லது இரு­த­ரப்பு உற­வின் அடிப்­ப­டை­யிலோ இருக்­கும்," என்­றது இந்­திய வெளி­யு­றவு அமைச்­சின் அறிக்கை.

தடுப்­பூசி பகிர்வு திட்­டத்­தின்­கீழ், 41 ஆப்­பி­ரிக்க நாடு­க­ளுக்கு 25 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட உள்ளூர் தயாரிப்பு தடுப்­பூ­சி­களை வழங்­கி­யுள்­ள­தாக இந்­தியா கூறி­யது.

இந்தியாவில் தடுப்­பூசி ஏற்­று­

ம­திக்­கான தடை சென்ற ஏப்­ரல் மாதம் நீக்­கப்­பட்­டது.

அதைத் தொடர்ந்து, அங்கு தடுப்­பூசி உற்­பத்தி மும்­ம­டங்கு அதி­க­ரித்து மாதத்­திற்கு 300 மில்­லி­யன் தடுப்­பூ­சி­கள் தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன.