நிரந்தர நோய்: மலேசியா நிறுத்திவைப்பு

நிரந்தர நோய்: மலேசியா நிறுத்திவைப்பு

1 mins read
6b398417-e1f1-41a5-9947-97c2b11adcd4
-

கோலா­லம்­பூர்: கொவிட்-19 கிருமிப் பர­வலை நிரந்­தர நோயாக கையா­ளும் மலே­சி­யா­வின் திட்­டம் தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­ப­டு­வ­தாக தற்­காப்பு அமைச்­சர் ஹிஷா­மு­தின் ஹுசைன் கூறி­னார்.

புதிய ஓமிக்­ரான் கிரு­மித்­தொற்றை பற்றி அர­சாங்­கம் நிறைய தெரிந்­து­கொள்ள வேண்­டி­யி­ருப்­ ப­தால், நேற்று நடை­பெற்ற அமைச்சு நிலை சந்­திப்­பில் இந்த முடிவு எடுக்­கப்­பட்­ட­தாக அவர் சொன்­னார்.

"நிரந்­த­ர ­நோ­யாக கையா­ளும் முயற்­சியை ஒத்­தி­வைக்­க­வில்லை. தற்­கா­லி­க­மாக நிறுத்தி­ வைத்­துள்­ளோம். ஏனெ­னில் புதிய உரு­மா­றிய ஓமிக்­ரான் தொற்­றைக் கண்­கா­ணித்து, அதைப் பற்றி முற்­றி­லு­மாக தெரிந்­து­கொள்­ள­வில்லை என்­றால் நிரந்­தர நோயாக கையா­ளும் முயற்­சி­க­ளுக்­குப் பல­னி­ருக்­காது.

"பரி­சோ­த­னை­க­ளின் மூலம் ஓமிக்­ரான் தொற்றை அடை­யா­ளம் காண­மு­டி­யும் என்­றா­லும் அது வேக­மாகவும் எளிதாகவும் பர­வக்­கூ­டி­யது," என்­றார் அவர்.

ஓமிக்­ரான் தொற்று அடை­யா­ளம் காணப்­பட்­டுள்ள நாடு

களுக்­கான எல்லைக் கட்­டுப்

பாடு­கள் கடு­மை­யாக்­கப்­படும் என்­றும் அவர் சொன்­னார்.