ஹாங்காங்: நான்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து செல்லும் வெளிநாட்டினருக்கு ஹாங்காங் தடை விதித்துள்ளது.
ஓமிக்ரான் உருமாறிய தொற்று காரணமாக கிருமிப் பரவல் அதிகரிக்கும் பேராபத்து உள்ளதாக உலகச் சுகாதார நிறுவனம் திங்கட்
கிழமை கூறியது.
இந்நிலையில் அங்கோலா, எத்தியோப்பியா, நைஜீரியா, ஸாம்பியா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் நேற்று முதல் ஹாங்காங்கிற்குள் நுழைய அந்நாடு தடை விதித்துள்ளது.
அந்நாடுகளில் இருக்கும் ஹாங்காங் குடியிருப்பாளர்கள், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களாக இருப்பின் நாடு திரும்பலாம். ஆனால் அரசாங்க இடத்தில் ஏழு நாள்களும் சொந்த செலவில் விடுதியில் இரண்டு வார காலமும் தனிமைப்
படுத்தப்படுவார்கள்.
அத்துடன், முந்திய 21 நாட்களில் ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், கனடா, செக் குடியரசு, டென்மார்க், ஜெர்மனி, இஸ்ரேல், இத்தாலி ஆகிய நாடுகளுக்குச் சென்ற வெளிநாட்டினர் டிசம்பர் 2ஆம் தேதி முதல் ஹாங்காங்கிற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்.

