ஜப்பான், பிரெஞ்சு தீவுகளில் ஓமிக்ரான் உருமாறிய தொற்று

1 mins read
f5c6efa2-fb04-4b5c-b121-d8ea6ad011a7
-

ஜப்பானின் தோக்கியோவில் கடந்த சில நாட்களாக 30க்கும் குறைவான தொற்று சம்பவங்களே பதிவாகி வருகின்றன. இந்நிலையில் நமிபியாவில் இருந்து ஜப்பான் சென்ற ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். அது ஓமிக்ரான் உருமாறிய தொற்றாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், அதை உறுதி செய்ய அடுத்தகட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஓமிக்ரான் அச்சம் காரணமாக திங்கட்கிழமை முதல் எல்லைக் கட்டுப்பாடுகளை ஜப்பான் கடுமையாக்கியது. இதற்கிடையே, பிரெஞ்சு தீவு ஒன்றிலும் ஒருவருக்கு ஓமிக்ரான் உருமாறிய தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. படம்: இபிஏ