சென்னை விமான நிலையத்தில் கொவிட்-19 பரிசோதனைக் கட்டணம் குறைப்பு

சென்னை விமான நிலையத்தில் கொவிட்-19 பரிசோதனைக் கட்டணம் குறைப்பு

1 mins read
78df707b-5422-4dbd-a5c7-1247fdca9ffa
சென்னை விமான நிலையத்தில் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கும் பயணிகள். படம்: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் -
Google News Preferred Icon

சென்னை விமான நிலையத்தில் ரூ.900ஆக இருந்த ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக் கட்டணம் நேற்று (டிசம்பர் 1) முதல் ரூ.700ஆக குறைக்கப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

முன்னதாக பரிசோதனைக் கட்டணம் ரூ.900ஆக இருந்தது.

'ஓமிக்ரான்' வகை கொரோனா கிருமி அச்சம் காரணமாக, தொற்று அபாயமுள்ள நாடுகளில் இருந்து இந்திய விமான நிலையங்களில் வந்திறங்கும் பயணிகளுக்குப் பரிசோதனை நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக் கட்டணம் ரூ.200 குறைக்கப்பட்டுள்ளது.