139 மாணவர்களுக்கு தொற்று

139 மாணவர்களுக்கு தொற்று

2 mins read
c0e44963-be86-40a1-ab3c-9b6b749b90d4
மலே­சி­யா­வின் சைபர்­ஜெ­யா­வில் உள்ள செரி புத்­தேரி பள்­ளி. படம்: எச்மெட்ரோ -

புத்­ரா­ஜெயா: மலே­சி­யா­வின் சைபர்­ஜெ­யா­வில் உள்ள செரி புத்­தேரி பள்­ளி விடு­தி­யில் தங்­கிப் படிக்­கும் மாண­வர்­கள் 139 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது என சிலாங்­கூர் சுகா­தா­ரத் துறை இயக்­கு­நர் டாக்­டர் ஷாரி ஞாடி­மன் ஓர் அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளார்.

தடம் அறி­யும் சோத­னை­யில் பள்ளி ஆசி­ரி­யர் ஒரு­வ­ருக்கு நவம்­பர் 22ஆம் தேதி தொற்று அறி­குறி தென்­பட்­ட­தா­க­வும் அதைத் தொடர்ந்து மேற்­கொள்­ளப்­பட்ட சோத­னை­யில் நவம்­பர் 23ஆம் தேதி அவ­ருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தா­கவும் கூறப்­ப­டு­கிறது. அத்­து­டன் மேலும் ஏழு மாண­வர்­க­ளுக்கு நவம்­பர் 29ஆம் தேதி தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

இந்­தக் காலக்­கட்­டத்­தில் பாதிக்­கப்­பட்ட மாண­வர்­களும் ஆசி­ரி­யர்­களும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­த­னர்.

செபாங் மாவட்­டத்­தில் உள்ள அந்­தப் பள்­ளி­யில் தொற்று பர­வா­மல் இருப்பதை உறு­தி­செய்ய, டிசம்­பர் 1ஆம் தேதி 240 பேருக்­கும் டிசம்­பர் 3ஆம் தேதி 523 பேருக்கும் தொற்று பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்­டது.

இச் சோத­னை­யில் 139 பேருக்­குக் கொவிட்-19 தொற்­றுப் பாதிப்பு இருந்­தது தெரி­ய­வந்­தது. அவர்­களில் 114 மாண­வர்­கள், 15 ஆசி­ரி­யர்­கள், 10 ஊழி­யர்­கள்.

பாதிக்­கப்­பட்ட மாண­வர்­க­ளின் பள்­ளிக்கு கல்வி மூத்த அமைச்­சர் ரட்ஸி ஜிடின் வருகை மேற்­கொண்டு அங்­குள்ள நிலை­மையை ஆய்வு­செய்­தார்.

தங்­கிப் படிக்­கும் பள்­ளி­யில் அதி­க­மான மாண­வர்­க­ளுக்கு கொவிட்-19 தொற்­றி­யி­ருப்­பது இதுவே முதல் முறை என்று தெரி­விக்­கப்­பட்­டது.

கடந்த ஆண்டு தொற்று உச்­சத்­தில் இருந்­த­போது, பள்­ளி­யில் தொற்று அடை­யா­ளம் காணப்­பட்­டால் அந்­தப் பள்ளி ஏழு நாட்­க­ளுக்கு மூடப்­பட வேண்­டும் என்று கல்வி அமைச்சு அறி­வித்­தது.

மலே­சி­யா­வில் கடந்த 24 மணி நேரத்­தில் புதி­தாக 5,806 பேருக்கு கொரோனா தொற்­றி­யுள்­ளது. நேற்று முன்­தி­னம் பதி­வா­ன­தைக் காட்­டி­லும் 367 பேர் அதி­கம்.

கொரேனா தொற்று நெருக்­கடி தொடங்­கி­ய­தில் இருந்து இது­வரை மொத்­தம் 2,644,027 பேர் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­னர்.

சிலாங்­கூர் சுகா­தா­ரத் துறை அறிவிப்பு