சிட்னி: புதிய வகை உருமாறிய ஓமிக்ரான் கிருமி கொடிய நோய் என்பதற்கு எவ்விதச் சான்றுகளும் இல்லை என்று ஆஸ்திரேலிய சுகாதாரத் துறை தலைவர் பால் கெல்லி நேற்று தெரிவித்துள்ளார்.
பல நாடுகளில் 300க்கு மேற்பட்ட தொற்றுப் பாதித்தவர்களிடம் மேற்கொண்ட சோதனையில் அவர்களுக்கு இலேசான பாதிப்பு மட்டுமே இருந்தது தெரியவந்துள்ளது. அத்துடன் தொற்றுப் பாதிப்புக்கான அறிகுறிகள் எதுவும் அறியப்படவில்லை," என்று பேராசிரியர் கெல்லி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் ஏழு பேருக்கு கொவிட்-19 உருமாறிய ஓமிக்ரான் தொற்றுப் பாதிப்பு பதிவானது. இவர்கள் யாரும் தென்னாப்பிரிக்காவில் இருந்து வரவில்லை. ஏழாவதாகப் பாதிக்கப்பட்ட ஒருவர் மட்டும் டோஹா, கத்தார் ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்தவர்.
பல நாடுகளில் ஓமிக்ரான் கிருமியால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். எனவே, ஓமிக்ரான் கிருமிக்கு எதிராகப் போராடும் ஆற்றல் தடுப்பூசிக்கு இல்லை என்பதற்கு சான்று ஏதுமில்லை என்று கூறியுள்ளார்.
இருப்பினும் ஓமிக்ரான் கிருமியால் யாரும் கடுமையாகப் பாதிக்கப்படவில்லை.
உலக நாடுகளை பெரிய அளவில் அச்சுறுத்தலைத் தந்துள்து புதிய உருமாறிய ஓமிக்ரான் தொற்று. டெல்டா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு நாம் முன்னெடுத்த நடவடிக்கைகள் இதற்கும் பொருந்தும். அதனால் ஓமிக்ரான் உருமாறிய கிருமியால் ஏற்படும் உயிரிழப்புகளை நம்மால் தவிர்க்க முடியும் என்று அந்நிறுவனத்தின் இயக்குநர் டெட்ராஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.
ஓமிக்ரான் போன்ற புதிய கொவிட்-19 கிருமிகள் உலகம் முழுதும் பரவும் வகையிலான சூழலை உலகம் உருவாக்கி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது. அதனால் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி முழுமையாகப் போடப்படவில்லை என்பதை அந்நிறுவனம் சுட்டியது. அத்துடன் ஏற்கெனவே உலகை ஆட்டிப்படைக்கும் டெல்டா உருமாறிய தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மூலம் புதிய ஓமிக்ரான் கிருமிப் பரவலைத் தடுக்கலாம் என்றும் அந்நிறுவனம் வலியுறுத்தியது.

