இந்தோனீசியா வந்திறங்கும் பயணிகளுக்கு 10 நாள் தனிமை

1 mins read
16a10c1d-d1f9-486e-8891-de41f7b4aeb0
-

ஜகார்த்தா: ஓமிக்­ரான் உரு­மா­றிய கிருமி அச்­சம் கார­ண­மாக இந்­தோ­னீ­சியா தனது எல்­லைக் கட்­டுப்­பாட்டை இறுக்­கு­கிறது.

ஆசிய நாடு­களில் குறிப்பாக கொவிட்-19 தொற்­றால் அதி­க­மா­னோர் பாதிக்­கப்­பட்ட இந்­தோ­னீ­சி­யா­வில் ஓமிக்­ரான் தொற்று இன்­னும் பதி­வா­க­வில்லை.

இருப்­பி­னும் அந்­நாடு முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக பய­ணக்­கட்­டுப்­பா­டு­களை இறுக்­கி­யுள்­ளது. அதன்­படி அந்­நாட்­டில் வந்­தி­றங்­கும் பய­ணி­கள் அனை­வ­ரும் 10 நாட்­கள் தனி­மைப் படுத்­திக் கொள்ள வேண்­டும் என்று அறி­வித்­துள்­ளது. முன்பு அது 7 நாட்­க­ளாக இருந்­தது.

ஆப்­பி­ரிக்க நாடு­களில் இருந்து நாடு திரும்­பும் இந்­தோ­னீ­சி­யர்­கள் 14 நாட்­கள் தனி­மை­யில் இருக்க வேண்­டும். அத்­து­டன் உள்­நாட்டு பய­ணச் சேவை­க­ளி­லும் அந்­நாடு கட்­டுப்­பா­டு­களை அறி­வித்­துள்­ளது.

சாலை­களில் மக்­கள் நட­மாட்­டம் குறைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக போக்­கு­வ­ரத்­துத் துறை தெரி­வித்­துள்­ளது.

இந்­தோ­னீ­சி­யா­வில் கடந்த ஜூலை மாதம் 40,000 ஆக இருந்த சரா­சரி தின­சரி தொற்று எண்­ணிக்கை கடந்த மாதம் 400 ஆகி­யுள்­ளது.