இலங்கையில் முதல் ஓமிக்ரான் சம்பவம்

இலங்கையில் முதல் ஓமிக்ரான் சம்பவம்

1 mins read
ca84fb04-75d6-4afa-b5bd-1a1f828a1828
-

கொழும்பு: நாட்­டில் முதல்­மு­றை­யாக ஓமிக்­ரான் தொற்­றுச் சம்­ப­வம் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது என்று இலங்கை சுகா­தார அதி­கா­ரி­கள் நேற்று தெரி­வித்­த­னர்.

அண்­மை­யில் தென்­னாப்­பி­ரிக்­கா­வி­லி­ருந்து திரும்­பிய ஒரு­வர் புதிய உரு­மா­றிய கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தார் என்று சுகா­தார அமைச்சு கூறி­யது.

"மர­பணு வரிசை சோதனை மூலம் ஓமிக்­ரான் கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்ட நோயா­ளியை அடை­யா­ளம் கண்­டு­பி­டித்­துள்­ளோம். நாங்­கள் அச்­ச­ம­டை­ய­வில்லை. சூழ்­நி­லை­யை சமா­ளித்து வரு­கி­றோம்," என்று சுகா­தார சேவை­க­ளின் துணை இயக்­கு­ந­ரான டாக்­டர் ஹேமந்த் ஹேராத் தெரி­வித்­தார்.

சென்ற வியா­ழக்­கி­ழமை அன்று இலங்­கை­யில் மொத்­தம் 735 புதிய தொற்­றுச் சம்­ப­வங்­களும் 27 பேர் தொற்­றுக்­குப் பலி­யா­ன­தும் பதி­வா­கி­யுள்­ளது.

ஏறக்­கு­றைய 10,000 பேர் தொற்­றால் பாதிக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.