ஜகார்த்தா: இந்தோனீசியா, அைனத்து வெளிநாட்டுப் பயணி களுக்கும் தனிமைப்படுத்தும் காலத்தை ஏழு நாள்களிலிருந்து பத்து நாள்களாக அதிகரித்துள்ளது. இது, நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதற்கு முன்னதாக தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா, நமிபியா, ஸிம்பாப்வே, மலாவி, லெசோத்தோ, மொஸாம்பிக், எஸ்வாட்டினி, அங்கோலா, ஸாம்பியா, ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கு இரு வாரங்களுக்குள் சென்றவர்கள் இந்தோனீசியாவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டது. இந்தோனீசிய குடிமக்களுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் அவர்களும் 14 நாட்கள் தனிமையில் தங்க வேண்டும்.
இந்த நிலையில் வெளிநாட்டுப் பயணிகளுக்கான தனிமைப் படுத்தும் காலத்தை அதிகரித்து அதிபர் ஜோக்கோ விடோடோ உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஜாவா, பாலி பகுதிகளில் கொவிட்-19 தடுப்பு நடவடிக்கை களுக்கு பொறுப்பு வகிக்கும் கடற்துறை விவகாரம் மற்றும் முதலீட்டு ஒருங்கிணைப்பு அமைச்சரான லுஹுட் பின்சார் பன்ட்ஜய்டான் தெரிவித்தார்.
புதிய ஓமிக்ரான் கிருமி பற்றி முழுமையாக தெரியும் வரை தனிமைப்படுத்தும் கொள்கை அப்போதைக்கு அப்போது பரிசீலிக் கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

