செமெரு குமுறல்: உயிர்ப் பலி

2 mins read
9f559e42-b15d-4b43-afcd-04ff7524e378
கிழக்கு ஜாவா கிராமம் ஒன்றில் செமெரு எரிமலைச் சாம்பலில் மூழ்கிய வாகனங்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

சம்­பர்­வூலு (இந்­தோ­னீ­சியா): இந்­தோ­னீ­சி­யா­வின் செமெரு எரி­மலை குமு­றியதால் குறைந்­தது 14 பேர் மாண்­டு­விட்­ட­னர். மேலும் பலர் காய­ம­டைந்­துள்­ள­னர். பெரும்­பாலோ­ருக்குத் தீக்காயங்­கள் ஏற்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.குறைந்­தது 16 பேர் கவ­லைக்­கிடமாக இருப்­ப­தா­க­வும் சில தக­வல்­கள் கூறின. வெள்­ளப்பெருக்­கைப் போல் சாம்­ப­லில் மூழ்­கி­யி­ருக்­கும் பல இடங்­களில் மீட்­புப் பணி­கள் நடை­பெற்­று­ வ­ரு­கின்­றன.

ஜாவா தீவில் ஆக உய­ர­மான மலை­யான செமெரு எரி­மலை குமு­றியதால் அதி­லி­ருந்து வெளி­வந்த சாம்­ப­லும் மேகம் போன்ற புகை­யும் அரு­கில் இருந்த கிரா­மங்­க­ளைச் சூழ்ந்­தன. லுமா­ஜாங் வட்­டா­ரத்­தை­யும் மலாங் நக­ரை­யும் இணைக்­கும் பாலம் துண்டிக்கப்பட்டது.

மேலும், பல கட்­ட­டங்­கள் பெரிய அள­வில் சேதமடைந்தன. லுமா­ஜாங் வட்­டா­ரத்­தில் உள்ள குறைந்­தது 11 கிரா­மங்­களில் வீடு­கள், பண்ணை உயி­ரி­னங்­கள் உள்­ளிட்­டவை சாம்­பலில் மூழ்­கின. சிலர் பள்­ளி­வாசல்­களில் அடைக்­க­லம் தேடிக்­கொண்­ட­னர். சிதை­வு­களில் சிக்­கிய சிலர் மீட்கப்பட்டனர். சம்­பர்­வூலு பகு­தி­யில் சேத­ம­டைந்த பல வீடு­கள் சாம்­ப­லால் போர்த்­தப்­பட்­டி­ருந்­தன. மோட்­டார்­சைக்­கிள்­களில் வீடு திரும்ப முயன்ற செமெ­ரு­வா­சி­களைத் தொண்­டூ­ழி­யர்­களை அந்­தப் பக்­கம் போகா­மல் பார்த்­துக்­கொள்ள முயன்­ற­தாக நேரில் பார்த்த ஒரு­வர் ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னத்­தி­டம் கூறி­யி­ருக்­கி­றார்.

இந்த நெருக்­க­டியை உடனே கையாண்டு பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு சிகிச்சை வழங்­கு­மாறு இந்­தோ­னீ­சிய அதி­பர் ஜோக்கோ விடோடோ உத்­த­ர­விட்­ட­தா­க­ மா­நில அர­சாங்­கம் தெரி­வித்­தது. நேற்று முன்­தி­னம் குமு­றிய செமெரு எரி­மலை, 12,000 மீட்­ட­ருக்­கும் அதி­க­மான உய­ரத்­திற்குச் சாம்­பலை வெளி­யேற்­றி­யது. எரி­ம­லைக் குழம்பு வழிந்­தது. சில நாள்­க­ளா­கப் பலத்த காற்­று­டன் கூடிய மழை பொழிந்­த­தால் செமெரு மலை குமு­றி­ய­தாக இந்­தோ­னீ­சி­யா­வின் வானிலை ஆய்வு நிலை­யம் ஒன்று தெரி­வித்­தது. எரி­மலை குமு­றிய பகு­தி­யி­லி­ருந்து ஐந்து கிலோ­மீட்­டர் தொலை­வில் உள்ள பகு­திக்கு வர­வேண்­டாம் என்று பொது­மக்­கள் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­ட­னர். பாதிக்­கப்­பட்ட பகு­தி­களி­லி­ருந்து 1,300க்கும் அதி­க­மா­னோர் வெளி­யேற்­றப்­பட்­ட­னர் அல்­லது தற்­காலி­கமாக இடம் மாற்­றப்­பட்டனர்.