ஓமிக்ரான் கிருமிப் பரவல்: அச்சத்தில் தவிக்கும் ஐரோப்பா

ஓமிக்ரான் கிருமிப் பரவல்: அச்சத்தில் தவிக்கும் ஐரோப்பா

1 mins read
788a176b-ee5c-4847-8ab4-84e6662977c1
-

லண்­டன்: பிரிட்­ட­னி­லும் டென்­மார்க்­கி­லும் மேலும் பல ஓமிக்­ரான் உரு­மா­றிய கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் நேற்று பதி­வா­னது. இதை­ய­டுத்து ஐரோப்­பா­வில் ஓமிக்­ரான் பெரு­ம­ளவு பரவி இருக்­கக்­கூ­டும் என்ற அச்­சம் நில­வு­கிறது.

45 நாடு­களில் ஓமிக்­ரான் தொற்று பர­வி­யுள்­ளது என்­றா­லும் ஐரோப்­பா­வில் அதி­க­மான சம்­ப­வங்­கள் பதி­வாகி வரு­கின்­றன.

பிரிட்­ட­னில் நேற்று பதி­வான 86 சம்­ப­வங்­க­ளை­யும் சேர்ந்து, அங்கு இது­வரை 246 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

டென்­மார்க்­கில் 183 சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யுள்­ளன. முந்­திய வாரத்­தை­விட இது மூன்று மடங்­கிற்­கும் அதி­க­மா­கும்.

ஐரோப்­பா­வில் கொவிட்-19 தொற்று தொடர்ந்து அதி­க­ரித்து வரு­வ­தோடு, ஓமிக்­ரான் சம்­ப­வங்­களும் பெரு­கி­யுள்­ளது அங்கு கவ­லையை மேலும் அதி­க­ரித்­துள்­ளது.

இந்த மாத தொடக்­கத்­தில் ஐரோப்­பாவைத் தொற்­று­நோ­யின் மையப்­ப­குதி என்­றது உல­க சுகா­தார நிறு­வ­னம்.

இதற்­கி­டையே, அமெ­ரிக்­கா­வி­லும் குறைந்­தது 16 மாநி­லங்­களில் ஓமிக்­ரான் தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யுள்­ளன.

விடு­மு­றைக்­கா­லம் நெருங்­கும் நேரத்­தில், உல­க­ள­வில் ஓமிக்­ரான் தொற்று சம்­ப­வங்­கள் அதி­க­ரித்து வரு­வ­தால் கட்­டுப்­பா­டு­கள் மேலும் கடு­மை­யாக்­கப்­பட வாய்ப்­புள்­ள­தாகக் கூறப்­ப­டு­கிறது.