பெர்லின்: ஜெர்மனியின் புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள ஓல்ஃப் ஸ்கால்ஸ், தனது அமைச்சரவையில் ஆண்களுக்கு சரிசமமான எண்ணிக்கையில் பெண்களையும் நியமித்துள்ளார்.
ஜெர்மன் வரலாற்றில் இந்த பாலின சமத்துவம் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. தற்போதைய அதிபர் மெர்கலின் அமைச்சரவையில் மூன்றில் ஒரு பங்கினரே பெண்கள் உள்ளனர்.
அமைச்சரவையில் எட்டு ஆண்கள், எட்டு பெண்கள் எனத் தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார் ஜெர்மனியின் புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள ஓல்ஃப் ஸ்கால்ஸ்.
அதுமட்டுமல்லாமல், அவர்கள் முக்கியமான துறைக்குப் பொறுப்பு வகிப்பார்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.
அந்த வகையில் வெளியுறவு, உள்துறை, தற்காப்பு ஆகிய மூன்றுத் துறைகளின் அமைச்சர்களாக அவர்கள் பொறுப்பேற்கவுள்ளனர்.
இன்னொருவர் வீட்டு வசதி, நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகின் அதிகாரத்துவமிக்க பெண்களில் ஒருவராக திகழும் ஏஞ்சலா மெர்கலின் 16 ஆண்டுகால அதிபர் பொறுப்பு முடிவுக்கு வருவதைத் தொடர்ந்து, ஜெர்மனியின் புதிய அமைச்சரவை இன்று பொறுப்பேற்கவுள்ளது.

