கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகளால் திணறும் வெளிநாட்டுப் பயணிகள்

கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகளால் திணறும் வெளிநாட்டுப் பயணிகள்

1 mins read
5d92912f-486d-4e31-8a82-5d85163900ea
சுய விருப்பத்தின் அடிப்படையில் இலவசமாக எடுக்கப்படும் விரைவு பரிசோதனையின் முடிவுக்காக லாஸ்‌ ‌ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள்.படம்: ஏஎஃப்பி -

வா‌ஷிங்­டன்: அமெ­ரிக்கா செல்­லும் வெளி­நாட்­டுப் பய­ணி­கள், ஒரு­

நா­ளுக்கு முன்­னர் கிரு­மித்­தொற்று இல்லை என்­ப­தற்­கான சான்­றி­தழை எடுக்கவேண்­டும் என்ற விதி­முறை நடப்­புக்கு வந்துள்ளது.

ஓமிக்­ரான் உரு­மா­றிய கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் வித­மாக அமெ­ரிக்கா கொண்டு வந்­துள்ள இந்த விதி­முறை பல பய­ணி­க­ளுக்­குத் தலை­வ­லியை ஏற்­

ப­டுத்­தி­யுள்­ளது.

ஓமிக்­ரான் அறி­யப்­ப­டு­வ­தற்கு முன்பு, முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் 72 மணி நேரத்­திற்கு முன்பு எடுக்­கப்­பட்ட­தொற்று இல்லை என்­பதை உறுதிப்படும் சான்­றி­த­ழைச் சமர்ப்பிக்கலாம் என்று இருந்­தது.

ஆனால் பல இடங்­களில் பரி­சோ­தனை முடிவு வர ஒரு­நா­ளுக்­கும் மேல் ஆகக்­கூ­டும் என்­ப­தால், புதிய விதி­மு­றை­யைப் பின்­பற்­று­வது சிர­ம­மாக உள்­ள­தா­க­வும் அத­னால் தங்­க­ளது பய­ணத் திட்­டங்­களை மாற்ற வேண்­டிய நிலை ஏற்­படும் என்­றும் பய­ணி­கள் கவலை தெரி­வித்­துள்­ள­னர்.

இதற்­கி­டையே, பய­ணத்­திற்கு 48 மணி நேரத்­திற்கு முன்பு கிருமித்­ தொற்று இல்லை என்­பதை உறுதிப்படுத்தும் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நடை­மு­றையை பிரிட்­ட­னும் நடப்­புக்கு கொண்டு வந்­தது.

ஓமிக்­ரான் தொற்­றக்கு முன்பு, பிரிட்­டன் செல்­லும் பய­ணி­களுக்குக் கிரு­மித்­தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்த பரி­சோ­தனை முடிவு வரும்­வரை இரண்டு நாட்­க­ளுக்கு தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும் என்ற விதி­முறை இருந்­தது.