சென்னை விமான நிலையத்தில் கொவிட்-19 பரிசோதனைக் கட்டணம் மேலும் குறைப்பு

சென்னை விமான நிலையத்தில் கொவிட்-19 பரிசோதனைக் கட்டணம் மேலும் குறைப்பு

1 mins read
30733401-e85c-4252-b6c7-a4d6935b21c8
சென்னை விமான நிலையத்தில் துரித கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள காத்திருக்கும் பயணிகள். படம்: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் -

சென்னை விமான நிலையத்தில் கொவிட்-19 பரிசோதனைக் கட்டணம் மேலும் குறைக்கப்பட்டுள்ளது.

அங்கு துரித பிசிஆர் பரிசோதனைக்கு ரூ.3,400யும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு ரூ.700யும் பயணிகளிடமிருந்து வசூலிக்கப்பட்டு வந்தது. இந்தக் கட்டணத்தை குறைக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், துரித பரிசோதனைக் கட்டணம் ரூ3,400லிருந்து ரூ.2,900ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு 700 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், ரூ.100 குறைத்து ரூ.600 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் இந்த நடைமுறை விமான நிலையங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஓமிக்ரான் கிருமிப் பரவலைத் தடுக்க தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய விமான நிலையங்களில் தென்னாப்பிரிக்கா, பிரிட்டன், போஸ்ட்வானா, கானா, தான்சானியா, சிங்கப்பூர், ஹாங்காங், நியூசிலாந்து உட்பட தொற்று அபாயம் உள்ள 11 நாடுகளில் இருந்து வருபவர்கள் அனைவருக்கும் மற்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2 விழுக்காட்டினருக்கும் கொவிட்-19 பரிசோதனை செய்யப்படுகிறது.