தோக்கியோவில் காபி கொடுக்கும் சிங்கப்பூரின் 'யெல்லா'

1 mins read
2c4659ca-e3a9-4dbb-a6be-acd7ba02075d
'யெல்லா' இயந்திர மனிதன் மணிக்கு 200 குவளை காப்பியைத் தயாரித்துவிடுமாம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தோக்கியோ: சிங்­கப்­பூ­ரர் ஒரு­வர் தொடங்­கிய 'கிர­வுன் டிஜிட்­டல்' என்ற நிறு­வ­னத்­தால் உரு­வாக்­கப்­பட்ட இயந்­தி­ர மனிதன், ஜப்­பா­னின் இரு பரபரப்பான ரயில் நிலை­யங்­களில் காப்பி தயா­ரித்து வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வழங்கி வரு­கிறது.

'யெல்லா' என்ற அந்த இயந்­தி­ரத்­தின் சேவை நேற்று தோக்­கியோ, யோக்கோ­ஹாமா ரயில் நிலை­யங்களில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டன.

அந்த இரு நிலை­யங்­க­ளை­யும் ஈஸ்ட் ஜப்­பான் ரயில்வே (ஜேஆர் ஈஸ்ட்) நிறு­வ­னம் நிர்­வ­கித்து வரு­கிறது.

கிர­வுன் டிஜிட்­டல் நிறு­வ­னத்­தில் ஜேஆர் ஈஸ்ட் முக்­கிய முத­லீட்­டா­ள­ராக உள்­ளது. அதன் தலைமை நிர்­வா­கி­யான கீத் டான், 41, மனி­த­வள செல­வு­க­ளால் இயந்­திர மனி­தர்­களை உரு­வாக்­கும் முயற்­சி­யில் ஈடு­பட்­டார்.

கிர­வுன் டிஜிட்­ட­லுக்கு ஜப்­பான் முதல் வெளி­நாட்­டுச் சந்­தை­யா­கும். அது, சிங்­கப்­பூ­ரில் உள்ள முப்பது எஸ்­எம்­ஆர்டி நிலை­யங்­களில் 'யெல்லா' வை சேவை­யில் ஈடு­ப­டுத்த திட்­ட­மிட்­டுள்­ளது.