'கிருமிப் பரவலைச் சமாளிக்க உலக நாடுகள் தயாராகவில்லை'

'கிருமிப் பரவலைச் சமாளிக்க உலக நாடுகள் தயாராகவில்லை'

2 mins read
8886890a-33b0-4c65-89f4-f96892df8e46
-
Google News Preferred Icon

லண்­டன்: கிரு­மிப் பர­வ­லின் அடுத்த அலை­யைச் சமா­ளிக்க உல­க நாடுகள் தயார் நிலை­யில் இல்லை என்­கிறது புதிய அறிக்கை ஒன்று.

2021 உல­க­ளா­விய சுகா­தார பாது­காப்பு குறி­யீட்­டின்­படி கொள்ளை நோயைச் சமா­ளிக்­கக்­கூ­டிய திறன் அடிப்­ப­டை­யில் 195 நாடு­கள் பட்­டி­ய­லி­டப்­பட்­டுள்­ளன.

லாப நோக்­க­மற்ற குழு­வான அணு­சக்தி அச்­சு­றுத்­தல் முன்­னெ­டுப்பு அமைப்­பும் ஜான்ஸ் ஹாப்­கின்ஸ் அமைப்­பும் இதனை வெளி­யிட்­டுள்­ளன.

90 விழுக்­காட்­டிற்­கும் அதி­க­மான நாடு­க­ளி­டம் அவ­ச­ர­கா­லத்­தில் மருந்­து­களை விநி­யோ­கிக்­கும் திட்­டம் எது­வும் இல்லை என்­று அறிக்கை கண்­ட­றிந்­துள்­ளது.

உயர் தயார்­நி­லைக்­கான 80.1 புள்­ளியை எந்த நாடும் எட்­ட­வில்லை. 75.9 புள்­ளி­க­ளு­டன் முத­லி­டத்­தில் உள்ள அமெ­ரிக்­கா­வைத் தொடர்ந்து ஆஸ்­தி­ரே­லியா, ஃபின்­லாந்து, கனடா, தாய்­லாந்து ஆகிய நாடு­கள் உள்­ளன.

சிங்­கப்­பூர் 57.4 புள்­ளி­க­ளு­டன் 24வது இடத்­தில் உள்­ளது.

சுகா­தார அமைப்­பு­கள், ஊழி­யர்­கள், ஆய்­வ­கங்­கள், உள்­கட்­ட­மைப்பு, அர­சாங்­கத்­தின் மீதான நம்­பிக்கை உள்­ளிட்­ட­வற்றின் அடிப்­ப­டை­யில் இவை மதிப்­பிடப்பட்டுள்ளன.

கடுமையான கட்டுப்பாடுகள்

இதற்­கி­டையே, அதி­க­மா­னோர் தொற்­றுக்கு ஆளா­வ­தா­லும் ஓமிக்­ரான் பர­வ­லா­லும் பிரிட்­டன், டென்­மார்க், ஹாங்­காங் ஆகிய நாடு­கள் கட்­டுப்­பா­டு­க­ளைக் கடு­மை­யாக்­கி­யுள்­ளன.

பொது இடங்­களில் முகக்­க­வ­சம் அணி­வது, தடுப்­பூசி சான்­றி­த­ழைக் காண்­பிப்­பது, வீட்­டி­லி­ருந்து வேலை செய்­வது என பிரிட்­ட­னில் கட்­டுப்­பா­டு­கள் மீண்­டும் கடு­மை­யாக்­கப்­பட்­டுள்­ளன.

கிரு­மிப் பர­வலை மட்­டுப்­ப­டுத்து வதற்கு, மீண்­டும் கட்­டுப்­பாடு களைக் கொண்டு வரு­வ­தைத் தவிர வேறு வழி­யில்லை என்று கூறி­யுள்­ளார் பிரிட்­டி‌ஷ் பிர­த­மர் போரிஸ் ஜான்­சன்.

முழு­மை­யான முடக்­க­நி­லைக்­குச் செல்­லா­மல் இருக்க வேண்­டு­மென்­றால், இந்த நட­வ­டிக்­கை­கள் அவ­சி­யம் என்­றும் அவர் சொன்­னார்.

டென்­மார்­க்கில் கிறிஸ்­மஸ் விடு­மு­றைக்கு பள்­ளிக்­கூ­டங்­கள் முன்­ன­தா­கவே மூடப்­ப­டு­கின்­றன.

இர­வு­நேர கேளிக்­கைக் கூடங்­கள் மூடப்­பட்­ட­தோடு அனை­வ­ரை­யும் வீட்­டில் இருந்து வேலை செய்­யு­மாறு கேட்­டுக்­கொண்­டுள்­ளார் அந்­நாட்டு பிர­த­மர் மெட் ஃபிரடெ­ரிக்­சன்.

ஹாங்­காங்­கில் 65 வய­துக்­குக் கீழ் உள்­ள­வர்­க­ளுக்­குத் தொடர்பு தட­ம­றி­தல் செயலி கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது.

திரை­ய­ரங்­கு­கள், உடற்­ப­யிற்­சிக் கூடங்கள், மது­பா­னக்­கூ­டங்­கள், உண­வ­கங்­கள் உள்­ளிட்ட

18 இடங்­க­ளுக்­குச் செல்­வோர் இதன் மூலம் தங்­க­ளது வரு­கை­யைப் பதிவு செய்ய வேண்­டும்.