200 அகதிகளுடன் கவிழ்ந்த வாகனம்; 54 பேர் மரணம்

200 அகதிகளுடன் கவிழ்ந்த வாகனம்; 54 பேர் மரணம்

1 mins read
283fef52-2ddf-4e32-bad1-7f12fac97632
விபத்தில் சிக்கிய டிரெய்லர் வாகனம். படம்: ராய்ட்டர்ஸ் -

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைவதற்கு டிரெய்லர் வாகனம் ஒன்றினுள் பதுங்கியிருந்து சென்ற அகதிகள் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். மெக்சிகோவில் நிகழ்ந்த இந்த விபத்தில் 54 பேர் உயிரிழந்தனர். 22 பேர் படுகாயமடைந்தனர்.

வியாழக்கிழமை நிகழ்ந்த இந்த விபத்தில் அந்த டிரெய்லர், பாலம் ஒன்றுடன் மோதி சிதறியதில் இத்தனை உயிரிழப்புக்கள் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.