ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரான் உருமாறிய கிருமித்தொற்று
டென்பசார்: உலகின் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரான் உருமாறிய கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தென்கிழக்காசிய நாடுகள் நிலைமையை அணுக்கமாக கண்காணித்து வருகின்றன.
இந்தோனீசியாவில் கிருமிப் பரவல் உச்சத்தில் இருந்த கடந்த ஜூலை மாதத்தில் மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் நோயாளிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
ஆனால், ஓமிக்ரான் உருமாறிய கிருமித்தொற்றின் காரணமாக அதேபோன்ற நிலைமை மீண்டும் ஏற்படாது என்று நம்புவதாக தலைமை மருத்துவர் எர்லினா புர்ஹான் சொன்னார்.
ஓமிக்ரான் எளிதில் பரவக்
கூடியது என்றாலும் அதனால் ஏற்
படக்கூடிய ஆபத்து டெல்டாவைவிட குறைவானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
புதிய பயணக் கட்டுப்பாடுகளை நாட வேண்டிய அவசியம் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஓமிக்ரான் தொற்று குறித்த அறிவிப்பு வெளியானவுடன் எல்லை கட்டுப்பாடுகளை மிகவும் கடுமையாக்கத் தயங்கிய உலக நாடுகள் பரிசோதனைகளை தீவிரப்படுத்திஉள்ளன.
நேற்று முன்தினம் முதல் தடுப்பூசி பயணத்தட திட்டத்தின்கீழ் சிங்கப்பூரில் இருந்து மலேசியா செல்பவர்கள் ஆறு நாட்களுக்கு அன்றாடம் கிருமித்தொற்று பரிசோதனை முடிவுகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று மலேசியா கூறியுள்ளது.
சிங்கப்பூர் வருபவர்கள் வந்திறங்கியவுடனும் மூன்றாவது, ஏழாவது நாளிலும் பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.
அடுத்த வாரம் முதல் தாய்லாந்து செல்பவர்கள் கிருமித்தொற்று பரிசோதனை முடிவு வரும் வரை தங்குவிடுதியில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
தனிமைப்படுத்தல் காலத்தை மூன்றிலிருந்து 10 நாள்களாக அதிகரித்துள்ளது இந்தோனீசியா.
"நாடுகள் பொறுத்திருந்து அடுத்த கட்டத்திற்குச் செல்லும் முறையைக் கடைப்பிடிக்கின்றன," என்றார் சிங்கப்பூரை அடிப்படையாக கொண்ட ஆய்வாளர் பீட்டர் மம்ஃபோர்ட்.
நிரந்தர நோயாக கையாளும் அளவிற்கு, பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட வில்லை என்றும் அவர் சொன்னார்.
இந்தோனீசியாவில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தாய்லாந்தில் அது 60 விழுக்காடு தான்.

