அசாஞ்சேயை அமெரிக்காவிற்கு நாடு கடத்த பிரிட்டன் ஒப்புதல்

அசாஞ்சேயை அமெரிக்காவிற்கு நாடு கடத்த பிரிட்டன் ஒப்புதல்

1 mins read
3c7ec06c-fd0d-4c49-a35b-4238b3f4964f
-

லண்­டன்: விக்­கி­லீக்ஸ் நிறு­வ­னர் ஜூலி­யன் அசாஞ்சேவை நாடு கடத்­து­வது தொடர்­பாக பிரிட்­டன் உயர்­நீ­தி­மன்­றத்­தில் தொட­ரப்­பட்ட மேல்­மு­றை­யீட்­டில் அமெ­ரிக்க அர­சாங்­கம் வெற்றி பெற்­றுள்­ளது.

இத­னை­ய­டுத்து தற்­போது லண்­ட­னின் உயர் பாது­காப்பு பெல்­மார்ஷ் சிறை­யில் இருக்­கும் 50 வய­தான விக்­கி­லீக்ஸ் நிறு­வ­னர் ஜூலி­யன் அசாஞ்சே அமெ­ரிக்­கா­விற்கு நாடு கடத்­தப்­ப­ட­வுள்­ளார்.

அசாஞ்சே மனி­தா­பி­மா­னத்­து­டன் நடத்­தப்­ப­டு­வார் என்பதற்கான அமெ­ரிக்காவின் உத்­த­ர­வா­தங்­கள் போது­மா­னவை என்று நீதி­மன்­றம் கூறி­யது.

கொல­ரா­டோ­வில் உள்ள அதிக பாது­காப்பு மிக்க சிறைச்­சா­லை­யில் அவரை அடைக்­க­மாட்­டோம் என்­றும், குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்டு அவ­ருக்­குத் தண்­டனை விதிக்­கப்­பட்­டால் அவர் ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு மாற்­றப்­ப­டு­வார் என்­றும் அசாஞ்சே தடுப்­புக்­கா­வ­லின் நிபந்­த­னை­கள் குறித்து அமெ­ரிக்கா அளித்த உத்­தரவா­தங்­களில் திருப்தி அடை­வ­தாக நீதி­பதி திமோதி கூறி­னார்.

அத்துடன் ஒப்­ப­டைப்பு கோரிக்­கையை உள்­துறை செய­லா­ளர் பிரித்தி பட்டே­லுக்கு மறு­ப­ரி­சீ­லனை செய்ய அனுப்­பு­மாறு கீழ் நீதி­மன்ற நீதி­ப­திக்கு உத்­த­ர­விட்­டது.

பிரிட்டனில் சட்ட நடைமுறையை மேற்­பார்­வை­யி­டும் பிரித்தி பட்டேல், அசாஞ்சே நாடு கடத்­து­வது குறித்த இறு­தித் தேர்வை எடுப்­பார்.

அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை 'ஹேக்' செய்து விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் வெளியிட்டார் அசாஞ்சே. இதையடுத்து அவர் மீது அமெரிக்கா குற்ற வழக்கு தொடர்ந்தது.

இதற்கிடையே பிரிட்டன், அசாஞ்சே கைது செய்யததைத் தொடர்ந்து, அவரைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு லண்டனில் அமெரிக்கா முறையீடு செய்தது.