கிருமித்தொற்றைக் கண்டறிய நெருப்புக்கோழி 'ஆன்டிபாடிகள்'

கிருமித்தொற்றைக் கண்டறிய நெருப்புக்கோழி 'ஆன்டிபாடிகள்'

1 mins read
baaa1eea-fae5-4df4-b7fb-ba9318de73e7
-

தோக்­கியோ: நெருப்­புக்­கோ­ழி­யின் 'ஆன்­டி­பா­டி­க­ளைப்' பயன்­ப­டுத்தி முகக்­க­வ­சம் ஒன்றை ஜப்­பான் ஆராய்ச்­சி­யா­ளர்­கள் கண்­டு­பிடித்து உள்­ள­னர்.

இதன் சிறப்பு என்­ன­வென்­றால், முகக்­க­வ­சத்­தில் கொவிட்-19 கிருமி இருந்­தால், அதைப் புற ஊதா கதிர்­க­ளின் கீழ் ஒளி­ரச் செய்­யும்.

மேற்கு ஜப்­பா­னில் உள்ள கியோட்டோ வட்­டார பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பேரா­சி­ரி­யர் யசு­ஹிரோ சுகா­மோட்­டோ­வும் அவ­ரது குழு­வி­ன­ரும் இத­னைக் கண்­டு­பி­டித்­துள்­ள­னர்.

கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ராக பற­வை­கள் வலு­வான எதிர்ப்­புத் திற­னைக் கொண்­டுள்­ளன என்ற முந்­திய ஆய்­வு­க­ளின் அடிப்­ப­டை­யில் இது உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

இதன்­படி நெருப்­புக்­கோ­ழி­யின் 'ஆன்­டி­பா­டி­கள்' பூசப்­பட்ட முகக்

கவச வடி­கட்­டியை ஆய்­வா­ளர்­கள் உரு­வாக்­கி­னர்.

தொற்­றுக்கு ஆளா­ன­வர்­கள் அணிந்­தி­ருந்த இந்த வகை முகக்­க­வ­சங்­கள் புற ஊதா கதி­ரின் ஒளி­யில் சோதிக்­கப்­பட்­டன. அப்­போது மூக்கு, வாய் பகு­தி­களில் ஒளிர்ந்­த­தாக ஆராய்ச்­சிக் குழு கூறி­யது.

புற ஊதா கதிர்­கள் இல்­லா­மல் தானா­கவே ஒளி­ரும்­படி முகக்­க­வ­சங்­களை மேம்­ப­டுத்த முடி­யும் என்று குழு நம்­பிக்கை தெரி­வித்துள்­ளது. இது குறைந்த விலை­யில் கிரு­மித்­தொற்று பரி­சோ­தனையை மேற்­கொள்ள உத­வும் என்­றும் அக்­குழு கூறி­யது.