அகதிகளை அழைத்துச் சென்ற லாரி கவிழ்ந்து 53 பேர் பலி

அகதிகளை அழைத்துச் சென்ற லாரி கவிழ்ந்து 53 பேர் பலி

1 mins read
c2decf96-5a0e-4eaf-b018-ec270c46fcc9
-

மெக்சிகோ: மெக்­சி­கோ­வில் அக­தி­ களை அழைத்­துச் சென்ற சரக்கு லாரி கவிழ்ந்த விபத்­தில் பலர் மாண்டனர்.

குவாட்டமாலா உள்­ளிட்ட மத்­திய அமெ­ரிக்க நாடு­களில் இருந்து சட்­ட­வி­ரோ­த­மாக பலரை அக­தி­க­ளாக ஏற்­றிக்­கொண்டு மெக்­சிகோ வழி­யாக அமெ­ரிக்க எல்­லையை நோக்­கிச் சென்­றபோது இந்த விபத்து நிகழ்ந்தது.

ஆபத்­தான வளைவை கடக்க முயன்­ற­போது, கட்­டுப்­பாட்டை இழந்த லாரி விபத்­துக்­குள்­ளா­ன­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதில் சம்­பவ இடத்­தி­லேயே

53 பேர் பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­தா­க­வும் 58 பேர் படு­கா­யம் அடைந்­த­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதி­க­ மானோர் காய­ம­டைந்­துள்­ள­தால் உயிரி­ழப்பு அதி­க­ரிக்­கக்­கூ­டும் என அஞ்­சப்­ப­டு­கிறது.