அமெரிக்காவில் சூறாவளி; குறைந்தது 50 பேர் பலி

அமெரிக்காவில் சூறாவளி; குறைந்தது 50 பேர் பலி

1 mins read
c202babf-baf8-42a9-9bee-161ad406cb2a
அமெரிக்காவின் கெண்டக்கி, டென்னஸ்ஸி, ஆர்கன்சா உள்ளிட்ட மாநிலங்களைத் தாக்கிய சூறாவளியில் ஏறத்தாழ 50 பேர் மாண்டிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.  -

அமெரிக்காவின் கெண்டக்கி உள்ளிட்ட சில மாநிலங்களைத் தாக்கிய சூறாவளியில் ஏறத்தாழ 50 பேர் மாண்டிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

அந்த சூறாவளி நேற்றும் (டிசம்பர் 10) இன்றும் (டிசம்பர் 11) அந்த மாநிலங்களைத் தாக்கின.

சூறாவளியில் இன்னும் பலர் மாண்டிருக்கலாம் என்று கெண்டக்கி மாநிலத்தின் ஆளுநர் ஆன்டி பெஷியர் கூறியதாக வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் தெரிவித்தது.

அந்த மாநிலத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

டென்னஸ்ஸி மாநிலத்தில் புயல்காற்றினால் குறைந்தது மூன்று பேர் உயிர் இழந்திருக்கலாம் என்றும் வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்தது.

அருகில் உள்ள ஆர்கன்சா மாநிலத்தில், தாதிமை இல்லத்தின் கூரை பிய்ந்ததில் குறைந்தது இருவர் உயிரிழந்தனர். ஐவர் காயமடைந்தனர்.

இல்லினோய் மாநிலத்தில் சூறாவளியும் புயல்காற்றும் தாக்கியபோது அமேசான் நிறுவனத்தின் கிடங்கில் பலர் சிக்கிக்கொண்டனர். கட்டடக் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

அலாபாமா, ஜார்ஜியா மாநிலங்களில் குறைந்தது ஆறு பேர் மாண்டனர்.