'ஸூம்' காணொளி வழியாக 900 ஊழியர்களைச் சட்டென்று பணிநீக்கம் செய்த பெட்டர்.காம் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி விஷால் கார்க் ஓய்வில் சென்றுள்ளார்.
அந்நிறுவனம் அனுப்பியிருந்த மின்னஞ்சலை சுட்டி, 'வைஸ்' செய்தித் தளம் இதனைத் தெரிவித்தது.
ஊழியர்களை திடுதிப்பென பணிநீக்கம் செய்ததில் தாம் கையாண்ட விதத்திற்காக திரு கார்க் முன்னதாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
இவ்வேளையில், நிறுவனத்தின் அன்றாட செயல்பாடுகளைத் தலைமை நிதி அதிகாரி கெவின் ரயன் நிர்வகிப்பார் என்று மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைத்துவம் மற்றும் நிறுவனக் கலாசாரத்தை மதிப்பீடு செய்வதற்காக, தன்னிச்சையாக செயல்படும் மூன்றாம் தரப்பு நிறுவனம் ஒன்றை பெட்டர்.காம் நிறுவனம் ஈடுபடுத்தியுள்ளது.

