'உலகின் ஆகப்பெரிய' நீல மாணிக்க கல்

'உலகின் ஆகப்பெரிய' நீல மாணிக்க கல்

1 mins read
10026104-bb0a-4d09-8f90-d25162413769
இந்த மாணிக்க கல்லுக்கு 'ஆசியாவின் ராணி' என பெயரிடப்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி -

உலகின் ஆகப்பெரியது எனக் கூறப்படும் நீல மாணிக்க கல் ஒன்று இலங்கையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு 'ஆசியாவின் ராணி' என பெயரிடப்பட்டுள்ளது. இதன் எடை 310 கிலோ கிராம்.

ஊடகங்களுக்கு இன்று (டிசம்பர் 12) இந்த மாணிக்க கல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தலைநகர் கொழும்பில் இருந்து 65 கிலோமீட்டர் தெற்கில் உள்ள ஹொரனவில் இந்தக் கல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.