மேஃபீல்ட்: அமெரிக்காவின் ஆறு மாநிலங்களில் சுழற்றியடித்த பலத்த சூறாவளி நேற்று மாலை வரை 83 உயிர்களைப் பலிவாங்கிவிட்டது. பலரைக் காணவில்லை. பல நகரங்கள் சின்னபின்னாமாகிவிட்டன.
ஆக அதிகமாகப் பாதிக்கப்பட்ட கெண்டக்கியை பேரிடர் பாதித்த மாநிலமாக அதிபர் பைடன் அறிவித்தார். அங்குள்ள மேஃபீல்ட் நகரில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. சூறாவளியின் சீற்றத்தில் மெழுகுவத்தி தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று சிக்கி உருக்
குலைந்துவிட்டது.
இரவு நேரத்தில் சூறாவளி தாக்கியபோது அந்த தொழிற்சாலைக்குள் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருந்தனர். அவர்களில் பலர் மாண்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
40 பேர் மீட்கப்பட்டுவிட்டனர். இன்னும் 60 பேர் தேடப்பட்டு வருவதாக கெண்டக்கி மாநில ஆளுநர் ஆன்டி பெஷியர் தெரிவித்தார்.
மேஃபீல்ட் நகரில் மீட்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. மொத்த சூறாவளி உயிரிழப்பு 100ஐ தாண்டக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
வரலாறு காணாத ஆகப்பெரிய சூறாவளிச் சம்பவங்களுள் ஒன்று இது என அதிபர் பைடன் குறிப்பிட்டுள்ளார்.

