ஆயுதம் தாங்கியவர் சுட்டுக்கொலை

ஆயுதம் தாங்கியவர் சுட்டுக்கொலை

1 mins read
8fb1fea2-3c32-43c3-8033-7d5d0d83ca3d
-
Google News Preferred Icon

லண்டன்: லண்டன் நகரின் கென்சிங்க்டன் வட்டாரத்தில் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் வங்கி ஒன்றில் துப்பாக்கியுடன் ஆடவர் ஒருவர் இருப்பதாக காவல் துறைக்குத் தகவல் சென்றது. அதனைத் தொடர்ந்து ஆயுதம் தாங்கிய சிறப்புப் படை அங்கு சென்றதாக ஏஎஃப்பி குறிப்பிட் டது. சுமார் 20 நிமிடங்கள் கழித்து அந்தப் படையினர் வாகனம் ஒன்றை இடைமறித்த தாகவும் துப்பாக்கிச்சூடு நடத்தப் பட்டதாகவும் கூறப்பட்டது. தொடர்ந்து மாலை 4.10 மணிக்கு முன்னர் ஆடவர் ஒருவர் மாண்ட தாக அறிவிக்கப்பட்டது. இச்சம்ப வம் பயங்கரவாதத்துடன் தொடர்பில்லை என மெட்ரோ பாலிட்டன் காவல்துறை தெரி வித்தது. மாண்டவரின் அடை யாளத்தை உறுதி செய்யும் பணி தொடருவதாகவும் அது கூறியது.