பரபரப்புக்குப் பின் ஓய்வு என தகவல்

1 mins read
413a0b0a-18ee-41ee-8589-522eb27c68a9
-

நியூ­யார்க்: ஸூம் சந்­திப்பு வழி­யாக 900 பேர் வேலை­நீக்­கம் செய்­யப்­பட்­டது கடந்த வாரம் சமூக ஊட­கங்­களில் பர­ப­ரப்­பா­கப் பகி­ரப்­பட்ட செய்தி. 'பெட்­டர் டாட் காம்' என்­னும் மின்­னி­லக்க அடை­மான நிறு­வ­னத்­தின் நிறுவனரும் தலைமை நிர்­வாக அதி­காரியுமான விஷால் கார்க் (படம்), அமெ­ரிக்­கா­வை­யும் இந்­தி­யா­வை­யும் சேர்ந்த ஊழி­யர்­களை வேலை நீக்­கம் செய்த பின்­னர் கடந்த வாரத் தொடக்­கத்­தில் தமது செய­லுக்கு வருத்­தம் தெரி­வித்­தி­ருந்­தார்.அதனைத் தொடர்ந்து, திரு கார்க் உட­ன­டி­யாக ஓய்­வில் சென்றுவிட்டதாக கடந்த வெள்­ளிக்­கி­ழமை வெளி­யான 'வைஸ்' இணை­யச் செய்தி தெரி­விக்­கிறது. 'பெட்­டர் டாட் காம்' அனுப்­பிய மின்­னஞ்­சலை அது மேற்கோள் காட்டியுள்ளது. நிறு­வ­னத்­தின் அன்­றாட நிகழ்­வு­களை தலைமை நிதி அலு­வ­லர் கெவின் ரயன் கவ­னித்­துக்­கொள்­வார் என்று தெரி­வித்­த­தோடு தலை­மைத்­து­வப் பணியை மதிப்பீடு செய்ய சுயேச்சை நிறு­வ­னம் ஒன்­றை அது ஈடுபடுத்தி இருப்பதாகவும் 'வைஸ்' செய்தி குறிப்­பிட்­டுள்­ளது. இருப்பினும் இது தொடர்பாக 'பெட்­டர் டாட் காம்' எதனையும் உறுதிப்படுத்த வில்லை.