உலகிலேயே ஆகப் பெரிதாக இருப்பதாகக் கூறப்படும் நீலக்கல்லை இலங்கை அதிகாரிகள் காட்சிக்கு வைத்துள்ளனர். அரிய கற்கள் அதிகம் தோண்டி எடுக்கப்படும் இரத்தினபுரி நகரில், 310 கிலோ எடை கொண்ட இந்தக் கல் சுமார் மூன்று மாதங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது.
பெருங்கல் கண்டெடுக்கப்பட்ட ரத்தினக்கல் குழியின் உரிமையாளர் ஒருவரது வீட்டில் இக்கல் தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பௌத்தத்துறவிகள் சிலர் மந்திரங்களை ஓத இந்தக் கல், கொழும்புக்குத் தெற்கிலுள்ள ஹொரானா நகரிலுள்ள அந்த வீட்டில் தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் இலங்கை, ரத்தினக்கல் வணிகம் மூலமாக அரை பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் ஈட்டியது.

