அயர்லாந்து பூங்காவை அலங்கரிக்கத் தயாராகும் வண்டு

அயர்லாந்து பூங்காவை அலங்கரிக்கத் தயாராகும் வண்டு

1 mins read
1fb5e553-3e69-40bc-bab8-a8026e26029c
-

மாமல்லபுரம்: அயர்லாந்து நாட்டில் உள்ள இந்திய சிற்பக்கலை பூங்காவை அலங்கரிப்பதற்காக 15 டன் எடைெகாண்ட ராட்சத வண்டு ஒன்று மாமல்லபுரத்தில் உள்ள ஒரு சிற்பக் கலைக் கூடத்தில் தயாராகி வருகிறது.

கருங்கல்லில் 10 அடி நீளம், 8 அடி உயரத்தில் இந்த ராட்சத வண்டு வடிவமைக்கப்பட்டு வருகிறது. எகிப்து நாட்டின் சின்னமாக திகழ்ந்து வரும் இந்த வண்டை, எகிப்தியர்கள் பலரும் ஒரு பதக்கம்போல் தங்களது கழுத்தில் அணிந்திருப்பர். மாமல்லபுரம் சிற்பக் கலைக் கல்லூரியில் பட்டம் பெற்ற சிற்பக் கலைஞர் முருகன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட சிற்பிகள் கடந்த எட்டு மாதங்களாகத் தொடர்ந்து இந்த வண்டை செதுக்கி வருகின்றனர்.

அயர்லாந்து நாட்டு சிற்பக் கலை ஆர்வலர் விக்டர்வேலால், 82, அந்த நாட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்திய சிற்பக் கலைப் பூங்காவில் அந்நாட்டு மக்கள் கண்டு ரசிக்கும் வகையில் இந்த ராட்சத வண்டு காட்சி அளிக்க உள்ளது.

99% பணிகள் முடிக்கப்பட்ட இந்த ராட்சத வண்டு இன்னும் ஒரு சில நாட்களில் சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் அயர்லாந்து நாட்டுக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக இதனை வடிவமைத்த சிற்பி முரு கன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.