'பேரழிவை ஏற்படுத்தும் சூறாவளி புது இயல்புநிலையாக இருக்கும்'

'பேரழிவை ஏற்படுத்தும் சூறாவளி புது இயல்புநிலையாக இருக்கும்'

1 mins read
fa354aa6-de1d-44b5-94db-b2fb9a6161e2
சூறாவளியால் நிலைகுலைந்துபோன கட்டடங்களின் இடிபாடுகளை அகற்றி சீரமைக்கும் பணியில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். படம்: ஏஎஃப்பி -

வா‌ஷிங்­டன்: கால­நிலை மாற்­றங்­க­ளுக்கு மத்­தி­யில், அதிக சக்­தி­வாய்ந்த, பேர­ழிவை ஏற்­படுத்­தக்­கூடிய, கொடிய ‌சூறா­வ­ளி­கள் இனி 'புதிய இயல்புநிலையாக' இருக்­கும் என்று அமெ­ரிக்க அவ­ச­ர­கால மேலாண்மை அதி­காரி ஒரு­வர் கூறி­யுள்­ளார்.

நேற்று முன்­தி­னம் அமெ­ரிக்­கா­வின் ஆறு மாநி­லங்­க­ளைப் புரட்­டிப்­போட்ட வர­லாறு காணாத ‌சூறா­வ­ளிக்­குக் கிட்­டத்­தட்ட 100 பேர் மாண்­டு­விட்­ட­னர். பல கட்­ட­டங்­கள் தரை­மட்­ட­மா­கின.

இந்­நி­லை­யில் பேசிய மத்­திய அவ­ச­ர­கால மேலாண்மை முக­மை­யின் தலை­வர் திரு­வாட்டி டீன் கிறிஸ்­வெல், "இது­தான் புதிய இயல்­பாக இருக்­கப்போகிறது.

"கால­நிலை மாற்­றத்­தால் நாம் காணும் இந்த விளை­வு­கள் நம் தலை­மு­றை­யின் நெருக்­க­டி­யா­கும்," என்­றார்.

இவற்­றால் ஏற்­ப­டக்­கூ­டிய தாக்­கங்­களை எப்­படி குறைப்­பது என்­ப­தில் கவ­னம் செலுத்த வேண்­டும் என்ற அவர், இயற்­கைச் சீற்­றங்­க­ளைச் சமா­ளிப்­ப­தில் அமெ­ரிக்கா எதிர்­கொள்­ளும் சவால் குறித்­தும் எச்­ச­ரித்­தார்.