அமெரிக்காவில் கொவிட்-19 பாதிப்பு 50 மில்லியனைக் கடந்தது

அமெரிக்காவில் கொவிட்-19 பாதிப்பு 50 மில்லியனைக் கடந்தது

2 mins read
413c996f-f1f3-4f0d-a6ef-b834f38e95b7
-

வாஷிங்­டன்: அமெ­ரிக்­கா­வில் கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 50 மில்­லி­ய­னைத் தாண்­டி­விட்­ட­தாக ராய்ட்­டர்ஸ் புள்­ளி­வி­வ­ரம் தெரி­விக்­கிறது.

புது­வகை ஓமிக்­ரான் கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க உலக நாடு­கள் நட­வ­டிக்­கை­களை முடுக்­கி­விட்­டுள்ள நிலை­யில், உரு­மா­றிய டெல்டா கிருமி அமெ­ரிக்­கா­வைத் தொடர்ந்து அச்­சு­றுத்தி வரு­கிறது.

கிட்­டத்­தட்ட இரண்டு மாதங்­க­ளாக அமெ­ரிக்­கா­வில் கொரோனா பர­வல் குறைந்து வந்த நிலை­யில், கடந்த இரு வாரங்­க­ளாக அன்­றாட கொரோனா பாதிப்பு மீண்­டும் ஏறு­மு­கத்­தில் உள்­ளது. இதற்கு டெல்டா கிரு­மியே முக்­கி­யக் கார­ண­மா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

அதே­போல, மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­படும் கொவிட்-19 நோயா­ளி­க­ளின் எண்­ணிக்­கை­யும் 20 விழுக்­கா­டு­வரை அதி­க­ரித்­துள்­ளது. கடந்த ஒரு மாதத்­தில், அங்கு கொவிட்-19 தொற்று இறப்பு எண்­ணிக்கை 4.6% கூடி­விட்­டது. இது­வரை அங்கு கொரோனா தொற்­றி ­யோ­ரில் 800,000க்கும் மேற்­பட்­டோர் மாண்­டு­விட்­ட­னர்.

ஏறக்­கு­றைய பாதி அமெ­ரிக்க மாநி­லங்­களில் ஓமிக்­ரான் கிருமி கண்­ட­றி­யப்­பட்­டு­விட்­டது. ஆனா­லும், புதிய பாதிப்­பு­களில் 99 விழுக்­காட்­டிற்கு டெல்டா கிரு­மியே கார­ண­மாக உள்­ளது என்று நோய்க் கட்­டுப்­பாட்டு, தடுப்பு மையத்­தின் இயக்­கு­நர் டாக்­டர் ரோஷல் வெலன்ஸ்கி குறிப்­பிட்­டார்.

அமெ­ரிக்­கா­வில் ஓமிக்­ரான் இன்­னும் குறிப்­பி­டத்­தக்க அச்­சு­றுத்­த­லாக உரு­வெ­டுக்­க­வில்லை.

"திடீ­ரென, புதி­தாக பாதிக்­கப்­படு­வோ­ரில் நூறுக்­குப் பத்­துப் பேரிடம் ஓமிக்­ரான் கண்­ட­றி­யப்­பட்­டால், அடுத்த வார­ரத்­தில் அது 20 விழுக்­கா­டாக உய­ர­லாம். அப்­போ­து­தான், டெல்­டா­வின் இடத்தை ஓமிக்­ரான் பிடிக்­க­லாம் எனக் கூற முடி­யும்," என்­றார் வெய்ல் கார்­னல் மருத்­து­வக் கல்­லூ­ரி­யின் நுண்­ணு­யி­ரி­யல், நோய்த்­த­டுப்­பாற்­ற­லி­யல் பேரா­சி­ரி­யர் டாடர் ஜான் மோர்.

அமெ­ரிக்­கா­வில் கொவிட்-19 பாதிப்பு எண்­ணிக்கை 25 மில்­லி­யனை எட்ட கிட்­டத்­தட்ட ஓராண்டு ­கா­லம் தேவைப்­பட்­டது என்­றும் ஆனால், அடுத்த 323 நாள்­களில் அவ்­வெண்­ணிக்கை 50 மில்­லி­ய­னைத் தொட்­டு­விட்­டதாகவும் ராய்ட்­டர்ஸ் தர­வுப் பகுப்­பாய்வு கூறுகிறது.