தென்கொரியாவில் மருத்துவப் படுக்கைகள் பற்றாக்குறை காரணமாக பலர் உயிரிழப்பு

தென்கொரியாவில் மருத்துவப் படுக்கைகள் பற்றாக்குறை காரணமாக பலர் உயிரிழப்பு

1 mins read
6f9b4d6f-7b45-42c8-be30-77310b69e6ea
தென் கொரியாவில் ஒரே நாளில் ஆக அதிகமாக 80 பேர் மாண்டு விட்டனர். படம்: ராய்ட்டர்ஸ் -

சோல்: தென்­கொ­ரி­யா­வில் கிரு­மித்­தொற்று கார­ண­மாக மருத்­து­வ­மனை­யில் அனு­ம­திக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்­கை­யும் உயி­ரி­ழப்­பும் ஒவ்­வொரு நாளும் புதிய உச்­சத்தை எட்­டு­கின்றன.

நேற்­று­முன்­தி­னம் அங்கு ஒரே நாளில் 80 பேர் மாண்­டு­விட்­ட­னர். கிரு­மிப் பர­வல் தொடங்­கி­ய­தில் இருந்து அங்கு பதி­வான ஆக அதிக எண்­ணிக்­கை­யா­கும் இது.

சென்ற வாரத்­தில் அங்கு சரா­சரி­யாக நாளொன்­றுக்கு 6,320 கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­கின. இது நவம்­பர் 1ஆம் தேதிக்கு முந்­திய வாரத்­தில் இருந்­த­தை­விட மூன்று மடங்கு அதி­க­மா­கும்.

அது­போல் கடைசி ஏழு நாள் சரா­சரி உயி­ரி­ழப்­பும் கிட்­டத்­தட்ட ஐந்து மடங்கு உயர்ந்து 57 ஆனது.

தீவிர சிகிச்சைப் பிரி­வில் கிட்­டத்­தட்ட 80 விழுக்­காட்­டிற்­கும் மேற்­பட்ட படுக்­கை­கள் நிரம்­பி­விட்­டன.

சனிக்­கி­ழமை இரவு நில­வ­ரப்­படி, மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தற்­காக சோலில் 1,739 பேர் காத்­துக்­கொண்­டி­ருந்­த­னர். அவர்­களில் 1,222 பேர் மோச­மான நிலை­யில் இருந்­த­னர்.

கடந்த ஐந்து வாரங்­களில் மருத்­து­வ­ம­னை­களில் படுக்­கை­கள் இல்­லாத சூழ­லில், கிட்­டத்­தட்ட 29 பேர் வீட்­டி­லேயே மாண்டு விட்­ட­தாக அதி­கா­ரத்­துவ புள்ளி விவ­ரங்­கள் கூறு­கின்­றன. கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்கு அதிக படுக்­கை­கள் ஒதுக்க வேண்­டி­யி­ருப்­ப­தால், சிகிச்சை தேவைப்­படும் மற்ற நோயா­ளி­கள் சிர­மத்­திற்கு ஆளா­வ­தாக மருத்­து­வர்­கள் கூறு­கின்­ற­னர்.