துபாய் அரசாங்க வேலைகளுக்கு வெளிநாட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்

துபாய் அரசாங்க வேலைகளுக்கு வெளிநாட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்

1 mins read
a5860880-1914-42d5-865d-6f6a8d608c12
துபாய் அரசாங்க அமைப்புகளில் சில வேலைகளுக்கு வெளிநாட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ் -

துபாயில் அரசாங்க அமைப்புகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வெளிநாட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அவற்றுள் சில வேலைகளுக்கு மாத ஊதியமாக 30,000 திர்ஹம் (8,100 அமெரிக்க டாலர்) வரை வழங்கப்படும்.

துபாய் அரசாங்க ஊடக அலுவலகம், துபாய் சுகாதார ஆணையம், துபாய் சுற்றுப்பயணக் கழகம், துபாய் பெண்கள் நிறுவனம் உள்ளிட்ட அரசாங்க அமைப்புகளில் காலிப் பணியிடங்கள் உள்ளதாக 'கலீஜ் டைம்ஸ்' செய்தி தெரிவிக்கிறது.

காலியாக உள்ள பணியிடங்களின் பட்டியலை https://dubaicareers.ae/en/pages/default.aspx என்ற இணையப்பக்கத்தில் காணலாம்.

தாதியர், தரவுப் பொறியாளர், உடலுறுதி மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வெளிநாட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.