புதுடெல்லி: கடந்த ஏழாண்டுகளில் 881,254 பேர் இந்தியக் குடியுரிமையைத் துறந்தனர்.
உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் நாடாளுமன்ற மக்களவையில் இன்று செவ்வாய்க்கிழமை இப்புள்ளிவிவரத்தை வெளியிட்டார்.
குறிப்பாக, 2019ஆம் ஆண்டில்தான் அதிகமானோர் இந்தியக் குடியுரிமையைக் கைவிட்டனர். அந்த ஆண்டில் மட்டும் 144,017 பேர் இந்தியக் குடியுரிமையைத் துறந்தனர்.
சென்ற 2020ஆம் ஆண்டில் 85,242 பேராகப் பதிவான அந்த எண்ணிக்கை, இவ்வாண்டில் மீண்டும் உயர்ந்தது.
2021 செப்டம்பர் 30ஆம் தேதிவரை 111,287 பேர் இந்தியக் குடியுரிமையை விட்டுவிட்டனர்.