இந்தோனீசியாவில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த பயங்கரவாதிகள் நால்வர் கைது

இந்தோனீசியாவில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த பயங்கரவாதிகள் நால்வர் கைது

1 mins read
909d8cc3-a6d5-4379-9a52-d640d19f75d4
-

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வில் பயங்­க­ர­வா­தி­கள் என்ற சந்­தே­கத்­தின் பேரில் நான்கு பேரை அந்­நாட்டு பயங்­க­ர­வா­தத் தடுப்­புக் காவல்­து­றை­யி­னர் கைது செய்­துள்­ள­னர்.

சுமத்­ரா­வின் தென்­ப­கு­தி­யில் உள்ள பெலம்­பாங், லுபுக்­லிங்­காவ் ஆகிய நக­ரங்­களில் அவர்­கள் கைது­செய்­யப்­பட்­ட­தாக காவல்­துறை அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார்.

கைது­செய்­யப்­பட்­ட­வர்­கள் அனை­வ­ரும் ஜாமியா இஸ்­லா­மியா தீவி­ரவாதக் குழு­வு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் என்று கூறப்­ப­டு­கிறது.

அவர்­கள் கிறிஸ்­மஸ், புத்­தாண்டு விடு­மு­றைக் காலங்­களில் பல இடங்­களில் தாக்­கு­தல் மேற்­கொள்­ளத் திட்­ட­மிட்­டி­ருந்­த­தா­கக் சுமத்ரா காவல்­துறை பேச்­சா­ள­ரும் மூத்த ஆணை­யா­ள­ரு­மான சுப்­ரி­யாடி, நேற்று முன்­தினம் நடந்த செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் தெரி­வித்­தார்.

இத­னை­ய­டுத்து விடு­முறை காலங்­களில் மக்­கள் நெருக்­க­மான பகு­தி­கள், வழி­பாட்­டுக் கூடங்­கள்ஆகி­ய­வற்­றில் பாது­காப்பை வலுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அந்த அதி­காரி தெரி­வித்­தார். இந்த நால்­வ­ரின் நட­வ­டிக்­கை­க­ளை­யும் காவல்­துறை கடந்த நான்கு மாதங்­க­ளா­கக் கண்­கா­ணித்து வந்­த­தா­க­வும், அவர்­கள் சந்­தே­கப்­படும் வகை­யில் அவர்­கள் நட­வ­டிக்கை இருந்­த­தால் கைது­செய்­யப்­பட்­ட­னர் என்று அந்த அதி­காரி தெரி­வித்­தார். கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.