பிலிப்பீன்சை வீழ்த்தியது தாய்லாந்து; அரையிறுதிக்கு சிங்கப்பூர் தகுதி
சிங்கப்பூர்: சுசுகி கிண்ண காற்பந்துப் போட்டியின் 'ஏ' பிரிவு ஆட்டத்தில் பிலிப்பீன்ஸ் குழுவை 2-1 எனும் கோல் கணக்கில் தாய்லாந்து வீழ்த்தியது. இந்த ஆட்டம் தேசிய விளையாட்டரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் தாய்லாந்தின் நட்சத்திர வீரர் டீராசில் டங்டா கோல் போட்டார்.
இடைவேளையின்போது 1-0 எனும் கோல் கணக்கில் தாய்லாந்து முன்னிலை வகித்தது. பிற்பாதி தொடங்கி ஏறத்தாழ 12 நிமிடங்களில் பிலிப்பீன்ஸ் கோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தது.
ஆனால் வெற்றி வாய்ப்பை நழுவவிடக்கூடாது என்று முனைப்புடன் போராடிய தாய்லாந்துக்கு ஆட்டத்தின் 78வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை கோலாக்கினார் டீராசில் டங்டா.
இன்றிரவு 8.30 மணிக்கு பீஷான் விளையாட்டரங்கத்தில் இந்தோனீசியாவும் வியட்னாமும் மோதுகின்றன.
இருகுழுக்களும் தலா ஆறு புள்ளிகளுடன் 'பி' பிரிவில் வலுவான நிலையில் உள்ளன.
'பி' பிரிவில் மூன்றாவது இடத்தில் மலேசியா இருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வியட்னாமிடம் 3-0 எனும் கோல் கணக்கில் படுதோல்வி அடைந்ததன் மூலம் மலேசியாவுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
யுனைடெட்-பிரென்ட்ஃபர்ட்
ஆட்டம் ஒத்திவைப்பு
லண்டன்: கொவிட்-19 கிருமித்தொற்றால் மான்செஸ்டர் யுனைடெட் குழு பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, பிரென்ட்ஃபர்ட் குழுவுக்கு எதிராக நேற்று நடைபெற இருந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கொவிட்-19 பாதிப்பு காரணமாக யுனைடெட் குழுவினர் பயிற்சியில் ஈடுபடும் கேரிங்டன் மைதானம் மூடப்பட்டுள்ளது. நேற்று முன்தின நிலவரப்படி இங்கிலிஷ் பிரிமியர் லீக்குடன் தொடர்புடைய 42 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

