இந்தோனீசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; வீட்டை விட்டு மக்கள் ஓட்டம்

2 mins read
2807759a-7481-4b7f-9278-1427da7710c9
இந்தோனீசியாவின் மக்கஸ்ஸார் என்ற நகரில், வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் நிலநடுக்கத்திற்கு அஞ்சி வீட்டிற்கு வெளியே வந்து நிற்கின்றனர். படம்: நூர்ஹலிஜா -

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வின் கிழக்­குப் பகு­தி­யில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை காலை 7.4 ரிக்­டர் அள­வி­லான நில­ந­டுக்­கம் ஏற்­பட்­ட­தா­க­வும் அத­னால் பேரா­பத்தை விளை­விக்­கக்­கூ­டிய ஆழிப் பேர­லை­கள் (சுனாமி) உரு­வாக வாய்ப்­புள்­ள­தா­க­வும் அமெ­ரிக்க நில­வி­யல் ஆய்வு நிலை­யம் தெரி­வித்­துள்­ளது.

கிரீன்­விச் நேரப்­படி நேற்று அதி­காலை 3.20 மணிக்கு, மௌமெரே நக­ருக்கு வடக்கே 100 கிலோ­மீட்­டர் தொலை­வில், ஃபுளோரெஸ் கட­லில் 187.5 கி.மீ. ஆழத்­தில் நில­ந­டுக்­கம் ஏற்­பட்­ட­தாக அந்த அமைப்பு கூறி­யது.

நில­ந­டுக்­கம் ஏற்­பட்ட இடத்­தில் இருந்து 1,000 கிலோ­மீட்­ட­ருக்­குள் உள்ள கட­லோ­ரப் பகு­தி­களை ஆழிப் பேர­லை­கள் தாக்க வாய்ப்­புள்­ள­தாக அமெ­ரிக்­கா­வைத் தள­மா­கக் கொண்ட பசி­பிக் சுனாமி எச்­ச­ரிக்கை மையம் தெரி­வித்து இருக்­கிறது.

இருப்­பி­னும், உயி­ரு­டற்­சே­தம் ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பு குறைவு­தான் என்று அமெ­ரிக்க நில­வி­யல் ஆய்வு மையம் கூறி­யி­ருக்­கிறது.

மலுக்கு, கிழக்கு நூசா தெங்­கரா, மேற்கு நூசா தெங்­கரா, தென்­கி­ழக்கு மற்­றும் தெற்கு சுல­வேசி ஆகிய பகு­தி­களில் சுனாமி எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

"எல்­லா­ருமே வீதிக்கு ஓடி­வந்து­விட்­டோம்," என்­றார் மௌமெரே நக­ரைச் சேர்ந்த அகஸ்­டின்ஸ் ஃபுளோரி­யா­னஸ் என்ற குடி­யி­ருப்­பா­ளர். முதல் நில­ந­டுக்­கத்­தைத் தொடர்ந்து, லரன்­டுக்கா பகு­தி­யில் 5.6 ரிக்­டர் அள­வில் பின்­ன­திர்வு ஏற்­பட்­ட­தாக இந்­தோ­னீ­சியா குறிப்­பிட்­டது.

"மேலும் கீழு­மாக ஓர் அலை­ய­டிப்­ப­து­போல உணர்ந்­தேன்," என்று லரன்­டுக்­கா­வைச் சேர்ந்த ஸக்­க­ரி­யாஸ் ஜென்­டனா கெரன்ஸ் சொன்­ன­தாக 'ராய்ட்­டர்ஸ்' செய்தி கூறி­யது.

இந்த நில­ந­டுக்­கத்­தால் கட­லின் மட்­டம் குறிப்­பி­டத்­தக்க வகை­யில் உய­ர­வில்லை என்று அந்த ஆய்வு நிலை­யம் தெரி­வித்­தது.

கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்­பர் 26ஆம் தேதி சுமத்­ரா­வில் 9.1 ரிக்­டர் நில­ந­டுக்­கம் ஏற்­பட்டு, அத­னைத் தொடர்ந்து உரு­வான ஆழிப் பேர­லை­க­ளால் இந்­தோ­னீ­சி­யா­வில் 170,000 பேர் உட்­பட அவ்­வட்­டா­ரத்­தில் 220,000 பேர் மாண்­டு­போனது குறிப்­பி­டத்­தக்­கது.

அது, மனி­த­குல வர­லாற்­றில் பேர­ழிவை ஏற்­ப­டுத்­திய இயற்­கைப் பேரி­டர்­களில் ஒன்­றாக அமைந்­து­விட்­டது. 2018ஆம் ஆண்­டி­லும் சக்தி வாய்ந்த நில­ந­டுக்­கம் அங்­குள்ள லொம்­போக் பகு­தி­யைத் தாக்­கி­யது. அதைத்­தொ­டர்ந்து சுற்­று­லாத் தல­மான சும்­பவா தீவில் சில வாரங்­க­ளாக தொடர்ச்­சி­யாக ஏற்­பட்ட கடு­மை­யான நில அதிர்வு­க­ளால் 550க்கு மேற்­பட்­டோர் மாண்­ட­னர்.

மேலும், அதே ஆண்டு சுலா­வேசி தீவின் பாலு என்­னு­மி­டத்­தில் 7.5 ரிக்­டர் அள­வில் ஏற்­பட்ட நில­நடுக்­கத்­தி­லும் அதை­யொட்டி உரு­வான ஆழிப்­பே­ர­லை­யி­லும் 4,300க்கு மேற்­பட்­டோர் மாண்­ட­னர்.