அமெரிக்க தொற்று மரணம் 800,000ஐ தாண்டியது

அமெரிக்க தொற்று மரணம் 800,000ஐ தாண்டியது

2 mins read
bc11ffb6-dac9-49a7-b660-b191cd0fc7a5
-

வாஷிங்­டன்: கொவிட்-19 கொள்ளை­ நோ­யால் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்ட அமெ­ரிக்­கா­வில் அந்த நோயால் மாண்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை செவ்­வாய்க்­கி­ழமை 800,000ஐ கடந்­து­விட்­டது. ஜான்ஸ் ஹாப்­கின்ஸ் பல்­க­லைக்­க­ழ­கத் தர­வு­கள் இத­னைத் தெரி­வித்­தது.

உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை நார்த் டகோட்டா, அலாஸ்கா போன்ற பல மாநி­லங்­க­ளின் மொத்த மக்­கள்­தொ­கை­யை­விட அதி­கம். இந்த ஆண்­டில் மட்­டும் 450,000 பேர் பலி­யா­கி­விட்­ட­னர். 2020 டிசம்­பர் மாதம் தொடங்கி அமெ­ரிக்கா தனது மக்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடும் பணி­யைத் தீவி­ர­மா­கச் செயல்­ப­டுத்தி வரும் நிலை­யி­லும் அங்கு மர­ணம் தொட­ரு­கிறது. உயி­ரி­ழந்­தோ­ரில் பெரும்­பா­லா­னோர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள் என்­ப­தும் தெரி­ய­வந்­துள்­ளது.

"கொவிட்-19 கொள்­ளை­நோயால் 800,000 அமெ­ரிக்க மக்­கள் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர். மாண்ட ஒவ்­வொ­ரு­வ­ரை­யும் நாம் நினை­வில்­கொள்­வோம். அவர்­க­ளின் குடும்­பத்­தி­ன­ருக்­காக நாம் பிரார்த்­திப்­போம்," என்று அதி­பர் ஜோ பைடன் தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

அமெ­ரிக்­கா­வில் செப்­டம்­பர் மாதம் ஆகக் கடை­சி­யாக நடத்­தப்­பட்ட ஆய்­வின்­படி தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள் மர­ண­ம­டை­யும் வாய்ப்பு 14 விழுக்­காடு அதி­கம் என்று தெரி­ய­வந்­தது.

டெல்டா கிரு­மித்­தொற்று கார­ண­மாக அமெ­ரிக்­கா­வில் எழுந்த நான்­காம் அலை­யில் தடுப்­பூசி போடும் பணி வேக­மாக நடை­பெற்­றது. 332 மில்­லி­யன் மொத்த மக்­கள்­தொ­கை­யில் 60 விழுக்­காட்­டி­ன­ருக்கு மேல் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­னர். இருப்­பி­னும் வசதி படைத்த இதர நாடு­க­ளின் தடுப்­பூசி போட்ட விகி­தத்­தில் அமெ­ரிக்கா பின்­தங்கி உள்­ளது.

தற்­போது ஐந்­தாம் அலை கிரு­மிப் பர­வ­லால் அமெ­ரிக்கா பாதிக்­கப்­பட்டு வரு­கிறது. கடந்த மாதம் தென்­னாப்­பி­ரிக்­கா­வில் கண்டு பிடிக்­கப்­பட்ட ஓமிக்­ரான் தொற்று கார­ண­மாக மக்­களில் பலர் வீட்­டுக்­குள் முடங்­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. அங்கு பதி­வா­கி­வ­ரும் மொத்த தொற்று எண்­ணிக்­கை­யில் 2.9 விழுக்­காடு ஓமிக்­ரான் தொற்று ஆகும். இதற்கு முந்­திய வாரத்­தைக் காட்­டி­லும் இது 0.4 விழுக்­காடு அதி­கம்.

இது மேலும் வேக­மா­கப் பர­வக்­கூ­டும் என்று கணிக்­கப்­பட்டுள்­ளது. குறிப்­பாக, அடுத்த மாதமே இதன் வேகம் அதி­க­ரிக்­க­லாம் என அமெ­ரிக்க நோய் கட்­டுப்­பாடு மற்­றும் தடுப்பு நிலை­யம் கூறியுள்ளது.