'ஓமிக்ரானை ஒடுக்க தடுப்பூசி மட்டும் போதாது; பூஸ்டர் துணையும் தேவை'

1 mins read
0907ef9c-b65f-4c52-8d32-f2012cfe3ef2
-

நியூ­யார்க்: அமெ­ரிக்­கா­வில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட மூன்று வகை­யான கொவிட்-19 தடுப்­பூ­சி­களும் புதிய ஓமிக்­ரான வகை தொற்­றுக்கு எதி­ரா­கக் குறைந்த ஆற்­ற­லைக் கொண்­டி­ருப்­பது ஆய்­வுக்­கூட சோதனை மூலம் தெரிய வந்­துள்­ளது.

இருப்­பி­னும் பூஸ்­டர் தடுப்­பூ­சி­யால் போது­மான பாது­காப்பு கிடைக்­க­லாம் என்று ெசவ்­வாய்க்­கி­ழமை வெளி­யி­டப்­பட்ட ஆய்­வ­றிக்கை கூறி­யது. மாசசூசெட்ஸ் பொது மருத்­து­வ­மனை, ஹார்­வர்ட் மற்­றும் மாசசூசெட்ஸ் தொழில்­நுட்­பக் கல்­விக்­க­ழ­கம் ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த ஆராய்ச்­சி­யா­ளர்­கள் இந்த ஆய்வை நடத்­தி­னர்.

மொடர்னா, ஃபசைர்-பயோ­என்­டெக், ஜான்­சன் அண்ட் ஜான்­சன் ஆகிய தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொண்­டோ­ரின் ரத்­தத்­தில் ஓமிக்­ரானை எதிர்க்­கும் ஆற்­றல் உள்­ளதா என்று பரி­சோ­தித்­துப் பார்க்­கப்­பட்­டது. ஆனால், போது­மான பாது­காப்பு ரத்­தத்­தில் இல்லை என்­பது சோதனை

முடி­வில் தெரி­ய­வந்­த­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி தெரி­வித்­துள்­ளது.