எல்லைகளைத் திறந்துவிட்டது ஆஸ்திரேலியா: 235,000 வெளிநாட்டினர் உள்ளே வர ஆயத்தம்

எல்லைகளைத் திறந்துவிட்டது ஆஸ்திரேலியா: 235,000 வெளிநாட்டினர் உள்ளே வர ஆயத்தம்

1 mins read
9990c24f-dae1-4d37-bd31-71a4fd0fc34c
மெல்பர்ன் அனைத்துலக விமான நிலையத்தில் நேற்று வெளி நாட்டுப் பயணி ஒருவர் இப்படி வரவேற்கப்பட்டார். படம்: ராய்ட்டர்ஸ் -

சிட்னி: தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட, திறன்­பெற்ற வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கும் வெளி­நாட்டு மாண­வர்­க­ளுக்­கும் ஆஸ்­தி­ரே­லியா நேற்று தனது எல்­லை­க­ளைத் திறந்­து­விட்­டது.

இந்­தப் பிரி­வி­னர் ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்­குள் நுழைய கிட்­டத்­தட்ட ஈராண்­டு­கள் தடை விதிக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில் கொவிட்-19 முடக்­க­நி­லை­யால் பாதிக்­கப்­பட்ட பொரு­ளி­யலை மீட்­டெ­டுக்­கும் முயற்­சி­க­ளின் ஒரு பகு­தி­யாக வெளி­நாட்­டி­ன­ருக்கு எல்­லை­கள் திறக்­கப்­பட்டு உள்­ள­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி குறிப்­பிட்­டது.

கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கில் 2020 மார்ச்­சில் ஆஸ்­தி­ரே­லியா தனது அனைத்­து­லக எல்­லை­களை மூடி­யது.

குறிப்­பிட்ட எண்­ணிக்­கை­யி­லான குடி­மக்­கள் மற்­றும் நிரந்­த­ர­வா­சி­கள் மட்­டுமே நாட்­டுக்­குள் நுழைய அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

தற்­போது எல்­லை­கள் திறக்­கப்­

ப­டு­வ­தால் ஊழி­யர் பற்­றாக்­குறை தீரும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. பொரு­ளி­யல் மீட்­சிக்கு அந்­தப் பற்­றாக்­குறை அச்­சு­றுத்­த­லாக விளங்கி வரு­கிறது.

வெளி­நாட்டு மாண­வர்­கள் உள்ளே வரு­வ­தன் மூலம் ஏரா­ள­மான தற்­கா­லி­கக வேலை­கள் நிரப்­பப்­படும்.

அக்­டோ­பர் மாத நில­வ­ரப்­படி 160,000 மாண­வர்­கள் உள்­ளிட்ட 235,000 வெளி­நாட்­டி­னர் ஆஸ்­தி­ரே­லி­யப் பய­ணத்­திற்­கான விசா பெற்­றுள்­ள­தாக அதி­கா­ரத்­துவ தர­வு­கள் தெரி­விக்­கின்­றன.

ஆஸ்­தி­ரே­லியா 16 வய­துக்கு மேற்­பட்ட தனது மக்­களில் கிட்­டத்­தட்ட 90 விழுக்­காட்­டி­ன­ருக்கு முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுள்­ளது.

மேலும், ஓமிக்­ரான் தொற்று கிளம்­பி­ய­தைத் தொடர்ந்து பூஸ்­டர் தடுப்­பூ­சிக்­கா­கக் காத்­தி­ருக்­கும் காலத்தை அது குறைத்­து­விட்­டது.