பேரிடர்களால் ஆசிய பசிபிக் வட்டாரத்தில் 57 மி. மக்கள் தவிப்பு

பேரிடர்களால் ஆசிய பசிபிக் வட்டாரத்தில் 57 மி. மக்கள் தவிப்பு

1 mins read
2412dba0-6dae-462f-8d67-b55ddf9f254b
-

சிங்­கப்­பூர்: பரு­வ­நிலை தொடர்­பான பேரி­டர்­க­ளால் இவ்­வாண்டு ஆசிய பசி­பிக் வட்­டா­ரத்­தில் 57 மில்­லி­ய­னுக்கு மேற்­பட்ட மக்­கள் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்டு உள்­ள­னர். ஏற்­கெ­னவே கொவிட்-19 கொள்­ளை­நோ­யால் துன்­பத்­தில் சிக்­கிய நிலை­யில் பேரி­டர்­களும் அந்த வட்­டார மக்­களை பாடாய்ப் ­ப­டுத்தி இருப்­ப­தா­கத் தெரிய வந்து உள்­ளது. இது தொடர்­பாக செஞ்­சி­லு­வைச் சங்­கக் கூட்­ட­மைப்­பான ஐஎஃப்­ஆர்சி சில தக­வல்­களை வெளி­யிட்டு உள்­ளது.

புயல், வெள்­ளம் தொடர்­பாக தெற்­கா­சியா கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்ட நிலை­யில் இந்­தி­யா­வில் மட்­டும் 18 மில்­லி­ய­னுக்கு மேற்­பட்ட மக்­கள் கடு­மை­யான பாதிப்­புக்கு ஆளா­யி­னர். பங்­ளா­தே­ஷை­யும் வெள்­ளம் ஆட்­டிப்­ப­டைத்­தது.

அத்­து­டன் நேப்­பா­ளத்­தில் மூன்­றில் ஒரு­ப­குதி வெள்­ளத்­தா­லும் நிலச்­ச­ரி­வு­க­ளா­லும் பாதிக்­கப்­பட்­டது.

பரு­வ­நிலை தொடர்­பான ஐந்து பேரி­டர்­களில் நான்கை ஆராய்ந்­த­தில் வானிலை தொடர்­பான சம்­ப­வங்­கள் தீவி­ர­ம­டைந்­தி­ருப்­ப­தைக் காண­மு­டி­வ­தாக 'ஐஎ­ஃப்­ஆர்சி'யின் அவ­ச­ர­நிலை செய­லாக்க மேலா­ளர் திரு­வாட்டி ஜெசிகா லெட்ச் தெரி­வித்­துள்­ளார். கடு­மை­யான புயல் காற்று, வெள்­ளம், வெப்ப அலை, கொசுக்­கள் பரப்­பும் நோய்­கள் போன்­றவை தற்­போது காணப்­படும் புதிய வகை பாதிப்­பு­கள் என்­றார் அவர்.

பேரி­டர் சம்­ப­வங்­க­ளின் அதி­க­ரிப்பு சாதா­ரண மக்­கள், அர­சாங்­கங்­கள் மற்­றும் நிவா­ரண அமைப்­பு­கள் போன்­ற­வற்­றுக்கு அதிக சிர­மங்­க­ளைத் தரக்­கூ­டும் என்­றும் திரு­வாட்டி ஜெசிகா தெரி­வித்­தார்.