சினோவேக் தடுப்பூசிக்கு ஓமிக்ரான் எதிர்ப்பாற்றல் இல்லை: ஆய்வு
ஹாங்காங்: சினோவேக் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப் பட்ட தடுப்பூசி ஓமிக்ரான் தொற்றைத் தணிப்பதற்குப் போதுமான நோய் எதிர்ப்புத்திறனைக் கொண்டிருக்க வில்லை என புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஹாங்காங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய அந்த ஆய்வின் முடிவுகள் செவ்வாய்க்கிழமை இரவு வெளி யிடப்பட்டன. சினோவேக் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக்கொண்ட 25 பேர் கொண்ட குழுவினரை சோதனைக்கூட ஆய்வுக்கு உட்படுத்தியதில் அவர்களின் ரத்தத்திலுள்ள நோய் எதிர்ப்பு ஆற்றல் ஓமிக்ரானை தணிக்கும் அளவுக்கு இல்லை எனத் தெரிய வந்தது. அதேபோல ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை முழுமை யாகப் போட்டுக்கொண்ட 25 பேர் அடங்கிய மற்றொரு குழு வினரிடம் ஆய்வு நடத்தப்பட்டதில் அவர்களில் ஐவரின் ரத்தத்தில் ஓமிக்ரானை எதிர்க்கும் ஆற்றல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
மலேசியா வந்த அமெரிக்கக் குழுவில் ஒருவருக்கு தொற்று
புத்ராஜெயா: தெற்காசிய பயணத்தில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிலிங்கன் குழுவில் இடம்பெற்றுள்ள ஒருவருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது மலேசியாவில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அவரது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. கோலாலம்பூரில் திரு பிலிங்கன் நேற்று பங்கேற்ற நடவடிக்கைகளில் அவர் கலந்துகொள்ளவில்லை. செவ்வாய்க்கிழமை பின்னேரம் கோலாலம்பூர் வந்திறங்கிய அவரும் அவரது குழுவில் உள்ள மூத்த அதிகாரிகளும் சுற்றுப் பயணத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் கொவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள். பாதிக்கப்பட்ட ஒருவர் தவிர மற்றவர்களுக்குத் தொற்று இல்லை என்பது உறுதியானதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்துள்ளது.
தடுப்பூசிச் சான்றிதழ் தராதவரின் வேலையைப் பறிக்க கூகல் திட்டம்
கலிஃபோர்னியா: கொவிட்-19 தடுப்பூசி தொடர்பான விதி
முறைகளை மீறும் ஊழியர்களுக்கு சம்பளம் வெட்டப்படும் என்றும் தொடர்ந்து அவர்களின் வேலை பறிக்கப்படும் என்றும் கூகல் நிறுவனம் எச்சரித்து உள்ளதாக சிஎன்பிசி தெரிவித்துள்ளது. ஊழியர்கள் அனைவரும் டிசம்பர் 3ஆம் தேதிக்குள் தங்களது தடுப்பூசிச் சான்றிதழை பதிவேற்றம் செய்யவேண்டும். அல்லது தடுப்பூசியிலிருந்து விலக்கு அளிப்பதற்கான விண்ணப்பத்தை அனுப்பவேண்டும் என்று கூகல் தலைமைத்துவம் தனது ஊழியர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியது.
யார் யார் சான்தழைப் பதிவேற்றம் செய்துள்ளனர், யார் யார் தடுப்பூசி போடவில்லை போன்ற விவரங்களை அறிய தனது ஊழியர்களுடன் விரைவில் தொடர்புகொள்ளப்போவ தாகவும் அது தெரிவித்தது. ஜனவரி 18க்குள் இந்த உத்தரவுக்கு இணங்காதவர்கள் 30 நாள்களுக்கு சம்பளத்துடனான கட்டாய விடுப்பில் வைக்கப்படுவர். பின்னர் ஆறு மாதங்களுக்கு சம்பளமில்லாத விடுப்பும் தொடர்ந்து வேலைநீக்கமும் இடம்பெறும் என்று கூகலின் ஆவணத்தைச் சுட்டிக்காட்டி சிஎன்பிசி கூறியுள்ளது.
பிரிட்டிஷ் பிரதமருக்கு கடும் எதிர்ப்பு
லண்டன்: ஓமிக்ரான் தடுப்பு நடவடிக்கையை அமல்படுத்து வதில் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு பிரதமர் பதவிக்கு வந்தது முதல் பலத்த எதிர்ப்பை அவர் நாடாளுமன்றத்தில் சந்தித்து உள்ளார். புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிராக அவரது சொந்தக் கட்சியினரே திரண்டுள்ளதால் திரு ஜான்சன் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆளும் பழமைவாதக் கட்சியின் சுமார் 100 எம்.பி.க்கள் பிரதமரின் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர். இந்த எண்ணிக்கை ஆளும் தரப்பின ரின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு.
தடுப்பூசி எதிர்ப்பு, கொலைத் திட்டம்
பெர்லின்: கிழக்கு ஜெர்மன் மாநில முதல்வரைக் கொலை செய்ய தடுப்பூசி எதிர்ப்பு இயக்கத்தினர் திட்டம் தீட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஜெர்மனி காவல் துறை தெரிவித்துள்ளது. கட்டாயத் தடுப்பூசித் திட்டத்திற்கு எதிரான வன்முறைப் போராட்டங்கள் அதிகரித்து வருவதா கவும் அது கூறியது. 'டெலிகிராம்' சமூக ஊடகக் குழு ஒன்றில் இடம்பெற்றுள்ள ஐவரைக் குறிவைத்து நடத்தப்பட்ட விசாரணையில் கொலைத் திட்டம் அம்பலமானதாக காவல் துறை மேலும் கூறியுள்ளது.

