பிலிப்பீன்சிலும் நுழைந்தது ஓமிக்ரான்

பிலிப்பீன்சிலும் நுழைந்தது ஓமிக்ரான்

1 mins read
d94bab90-83f7-4ed0-9880-f41cf0108856
-

மணிலா: பிலிப்­பீன்­சில் முதல்­மு­றை­யாக இரு­வ­ருக்கு ஓமிக்­ரான் தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது என்­றும் அந்த இரு­வ­ரும் வெளி­நா­டு­களில் இருந்து வந்­த­வர்­கள் என்­றும் பிலிப்­பீன்ஸ் சுகா­தா­ரத் துறை நேற்று கூறி­யது. அவர்­களில் ஒரு­வர் ஜப்­பா­னி­லி­ருந்து நாடு திரும்­பிய பிலிப்­பீன்ஸ் குடி­

ம­கன். டிசம்­பர் 1ஆம் தேதி அவர் மணிலா வந்­தி­றங்­கி­ய­தாக உள்­ளூர் செய்­தித்­தாள் ஒன்று கூறி­யது.

மற்­ற­வர் நைஜீ­ரி­யா­வி­லி­ருந்து நவம்­பர் 30ஆம் தேதி வந்­த­வர். இரு­வ­ரி­ட­மும் தொற்­றுக்­கான அறி­குறி காணப்­ப­ட­வில்லை என­வும் அவர்­கள் தடை­காப்பு மையங்­களில் தனி­மைப்படுத்­தப்­பட்­டுள்­ள­தா­க­வும் சுகா­தா­ரத் துறை தெரி­வித்­தது.